ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அம்மா மினி கிளினிக்குகளுக்கு உரிய நேரத்தில் மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயக்குமார்

அம்மா மினி கிளினிக்குகளுக்கு உரிய நேரத்தில் மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

பெரியாரை ஸ்டாலின் மதிப்பதாக இருந்தால் பெரியார் சொன்ன தமிழ் சீர்த்திருத்தை பின்பற்றி ஸ்டாலின் தனது பெயரை சுடாலின் என்றே எழுத வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

அரசு துவங்கியுள்ள அம்மா மினி கிளினிக்குகளுக்கு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் உரிய நேரத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் அம்மா மினி கிளினிக்கை இன்று அமைச்சர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சீமான் போன்றவர்கள் எம்ஜிஆர் புகழை அழிக்க முடியாது என்று தெரிவித்தார். எம்ஜிஆர் புகழை அழிக்க நினைப்பவர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வார்கள் என்றும் கூறினார்.

வருகின்ற 27ஆம் தேதி நடைபெறக்கூடிய பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சியான பாமக பங்கேற்குமா என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர் இதுகுறித்து தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்றும் அதிமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றும் கூறினார்.

Also read... வாரம் ஒருமுறை பேரறிவாளனை சந்திக்க அற்புதம்மாளை அனுமதிக்க வேண்டும்- சிறைத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக தமிழ்மொழிக்கு ஏராளமான தொண்டாற்றியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்தம், தமிழ் பல்கலைக்கழகம் அமைத்தது உள்ளிட்ட பல சாதனைகள் அடங்கும் என்று கூறினார்.

தந்தை பெரியாரை, மு.க.ஸ்டாலின் மதிப்பதாக இருந்தால் பெரியார் சொன்ன தமிழ் சீர்த்திருத்தை பின்பற்றி ஸ்டாலின் தனது பெயரை சுடாலின் என்றே எழுத வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Minister Jayakumar