மீன் விற்பனைக்காக புதிய செயலி உருவாக்க நடவடிக்கை - அமைச்சர் ஜெயக்குமார்!

மானியக் கோரிக்கை விவாதத்தின் போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் எத்தனை பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என திமுக உறுப்பினர் இதயவர்மன் கேள்வி எழு்பபினார்.

news18
Updated: July 6, 2019, 7:36 AM IST
மீன் விற்பனைக்காக புதிய செயலி உருவாக்க நடவடிக்கை - அமைச்சர் ஜெயக்குமார்!
அமைச்சர் ஜெயக்குமார்
news18
Updated: July 6, 2019, 7:36 AM IST
மீன் விற்பனைக்காக புதிய செயலியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடை வளர்ப்புத்துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

கடல் உணவுப்பொருட்களின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மீன் விற்பனைக்காக தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் சார்பில் புதிய செயலி உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மீன்வளத்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மானியக் கோரிக்கை விவாதத்தின் போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் எத்தனை பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என திமுக உறுப்பினர் இதயவர்மன் கேள்வி எழு்பபினார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், 2019 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 100 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், மீட்கும் நிலையில் இருந்த 36 மீன்பிடி படகுகள் மீட்டு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பதில் கூறினார். மீதமுள்ள 5 மீனவர்கள் மற்றும் 33 மீன்பிடி படகுகளை விடுவிக்க அரசு முயற்சித்து வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Also see...

First published: July 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...