சிதம்பரம் கைதால் துரை முருகன் மகிழ்ச்சி...! திமுகவின் உள்ளடி வேலை என்கிறார் அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதா கைது செய்யபட்டபோது போலிசாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.

Web Desk | news18
Updated: August 22, 2019, 12:39 PM IST
சிதம்பரம் கைதால் துரை முருகன் மகிழ்ச்சி...! திமுகவின் உள்ளடி வேலை என்கிறார் அமைச்சர் ஜெயகுமார்
அமைச்சர் ஜெயக்குமார்
Web Desk | news18
Updated: August 22, 2019, 12:39 PM IST
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யபட்டது திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு பெரும் தலைகுனிவு என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். 

டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டில் அதிரடியாக நுழைந்த சிபிஐ, அமலாக்கதுறையினர் நேற்று அவரை கைது செய்து அழைத்து சென்றனர். இந்நிலையில் அவரது கைது குறித்து பல அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இன்று அமைச்சர் ஜெயகுமார் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார், ”அப்போது கைது செய்யும் நிலையை ஏற்படுத்தியவர் ப. சிதம்பரம்தான். தன்மீது குற்றம் இல்லாதபோது சிபிஐ அமலாக்க பிரிவு முன்பு ஆஜராகி விளக்கம் கொடுத்திருக்க வேண்டும். ப.சிதம்பரம் கைது செய்யபட்டது திமுக, காங்கிரசுக்கு பெரும் தலை குனிவு” என்றார்.


அதனைத் தொடர்ந்து பேசியவர், “எதிர்கட்சிகள் சிதம்பரத்தின் கைதை அரசியலாக்க முயற்சியை செய்து வருகிறது. ஜெயலலிதா கைது செய்யபட்டபோது போலிசாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.

மேலும் ஒரு வழக்கறிஞராக சாமர்த்தியமாக வாதாடி தன்னை சிதம்பரம் விடுவித்திக்கொள்வார் என்று துரைமுருகன் கூறியிருந்தார். ஆனால் ப.சிதம்பரம் கைது செய்யபட்டது துரை முருகனுக்கு மகிழ்ச்சிதான் என்றும் இதில் இருந்தே தெரிகிறது திமுகவில் உள்ளடி வேலை நடக்கிறது என்றும் அவர் கூறினார்.

மேலும் பார்க்க... ப.சிதம்பரம் கைது... பரபரப்பு நிமிடங்கள்...

Loading...

First published: August 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...