2021-ல் யார் கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு கவலையில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

2021-ல் யார் கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு கவலையில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் மக்கள் அங்கீகாரம் அதிமுகவிற்கு தான் என தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், யார்வேண்டுமானலும் கட்சி ஆரம்பிக்கலாம் நாம் கேள்வி கேட்கமுடியாது. ஆனால் மக்கள் அதிமுகவினை அரியணை ஏற்ற தயாராக உள்ளார்கள். 2021-ல் யார் கட்சி தொடங்கினாலும் WE DONT CARE என தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பிக்பாஸ் நிகழ்ச்சி கலாச்சார சீரழிவு என்றும், சமூக கலாச்சாரத்தை ஒழிக்கும் கமல் எப்படி மக்களுக்கு நல்லது செய்வார் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

    சென்னை ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட கே.சி.சங்கரலிங்க நாடார் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தை நேற்று துவங்கி வைத்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது கமல்ஹாசன் குறித்த கேள்விக்கு, கமல்ஹாசன் போட்ட டிவிட்டர் அவருகே தான் பொருந்தும் என்றும், அவர் தான் எம்.ஜி.ஆரின் தொண்டர்களின் காலையும், அதிமுக வினர் காலை பிடித்து வருகிறார் எனவும் கூறினார்.

    மேலும், கமல் திமுகவிற்கு தான் டிவிட்டர் பதிவிட்டுள்ளதாக கூறிய அவர், 2ஜி வழக்கில் ராசா மேல் நடவடிக்கை எடுத்தபோது வெளியேறாமல் பதவி முக்கியம் என காங்கிரஸ் காலை தான் திமுக பிடித்திருந்தார்கள் என்றும் கூறினார். அதிமுகவின் வாக்கை வாங்கவே கமல் எங்கள் வாலை பிடித்து வருவதாகவும், போயும் போயும் மனிதனுக்கு இந்த புத்தியை கொடுத்தானே என்று தான் கமலுக்கு கூற விரும்புவதாகவும் அவர் விமர்சனம் செய்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், எம்.ஜி ஆரை எந்த கட்சியினரும் உரிமை கொண்டாடக்கூடாது என கூறிய அவர், எம்.ஜி.ஆர் பெயர் சொல்ல கமலுக்கு தகுதி இல்லை என்றும், எம்.ஜி.ஆர் அதிமுக ஆட்சி வர வேண்டும் என்று தான் நினைப்பார் எனவும், கமல் ஏன் புரட்சி தலைவர் என கூற மறுக்கிறார் ? என கேள்வி எழுப்பினார்.

    சந்தர்ப்பத்திற்காகவும், சுயநலத்திற்காகவும் எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்துவதே கமல்ஹாசனின் ஒரே நோக்கமாக உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். லஞ்சம், ஊழல் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே அதிகாரிகள் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், எங்கள் கடமையை பாராட்டுவதை விட்டு டிவீட் போடுகிறார் என்றால் கமல் என்ன கூற வருகிறார்என்று தெரிவித்தார்.

    ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் மக்கள் அங்கீகாரம் அதிமுகவிற்கு தான் என தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், யார்வேண்டுமானலும் கட்சி ஆரம்பிக்கலாம் நாம் கேள்வி கேட்கமுடியாது. ஆனால் மக்கள் அதிமுகவினை அரியணை ஏற்ற தயாராக உள்ளார்கள். 2021-ல் யார் கட்சி தொடங்கினாலும் WE DONT CARE என தெரிவித்தார்.

    திமுக உண்ணாவிரதம் தொடர்பான கேள்விக்கு, திமுக சட்டத்தை என்று மதித்தார்கள்? என்றும், தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டிற்கு செய்த துரோகத்திற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும், சட்டத்தை யாராக இருந்தாலும் மதிக்க வேண்டும், திமுக சட்டத்திற்கு அப்பாற்பட்ட கட்சியா? எனவும் கேள்வி எழுப்பினார்.

    Also read... டார்ச்லைட் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி ம.நீ.ம கட்சி உயர்நீதிமன்றத்தில் மனு

    பிக்பாஸ் நிகழ்ச்சி கலாச்சார சீரழிவு என குற்றம்சாட்டிய அவர், குடும்ப சீரழிவிற்கு பிக்பாஸ் துணை போவதாகவும், கமலுக்கு மனசாட்சி இல்லையா? எனவும், பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தி, சமூக கலாச்சாரத்தை ஒழிக்கும் கமல் எப்படி மக்களுக்கு நல்லது செய்வார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    மேலும், மக்கள் பார்த்துக்கொண்டிருப்பதாக கூறிய அவர், அதற்கான பாடம் புகட்டுவார்கள் என்றும், திருடனை பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது எனவும், கமலாக தான் திருந்த வேண்டும் என்றும் கூறினார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: