• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அதிமுகவின் தேர்தல் அறிக்கையே நாடாளுமன்றத் தேர்தலின் நிஜ நாயகன், நாயகி: அமைச்சர் ஜெயகுமார்

அதிமுகவின் தேர்தல் அறிக்கையே நாடாளுமன்றத் தேர்தலின் நிஜ நாயகன், நாயகி: அமைச்சர் ஜெயகுமார்

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார்

திமுக அரைவேக்காட்டு தனமான தேர்தல் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
அதிமுகவின் தேர்தல் அறிக்கையே நாடாளுமன்றத் தேர்தலின் நிஜ நாயகன், நாயகி என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுகத் தேர்தல் அறிக்கை  குறித்துப் பேட்டி அளித்த அமைச்சர் ஜெயகுமார், “அதிமுகவிற்கு ஒட்டு போட்டால் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கு மாதம் 1500 ரூபாய் கிடைக்கும் என்றார்.

மேலும் அவர் கூறியதாவது: “திமுக அரைவேக்காட்டு தனமான தேர்தல் அறிக்கை வெளியிட்டு உள்ளது. இந்தத் தேர்தலில் திமுகக் கூட்டணி தோல்வி அடையும். அதன் பின் திமுகவுக்கு அழகிரி தலைவராவார்.

இலங்கையில் நடைபெற்ற இன படுகொலைக்குத் திமுகப் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஈழ தமிழர் விவகாரத்தைச் சர்வதேச அளவுக்குக் கொண்டுசென்று உரிய தண்டனையை வாங்கித் தருவோம்.

இலங்கைப் படுகொலை காரணமாகக் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியில் வந்த நாள் இன்று. கருத்துக் கணிப்பு முடிவுகள் சரியான முறையில் இல்லை அது கருத்துத் திணிப்புகள் தான்.

7 பேர் விடுதலையில் அதிமுக அக்கறையோடு உள்ளது” என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார் .




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





மேலும் பார்க்க:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilarasu J
First published: