அ.தி.மு.க ஒரு ஜென்டில்மேன் கட்சி: அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம்!

கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

news18
Updated: July 2, 2019, 10:59 AM IST
அ.தி.மு.க ஒரு ஜென்டில்மேன் கட்சி: அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம்!
அமைச்சர் ஜெயக்குமார்
news18
Updated: July 2, 2019, 10:59 AM IST
தேர்தல் கூட்டணியில் பாமகவுக்கு சொன்னபடி ஒரு ராஜ்ய சபா சீட் வழங்கப்படும் என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை  அமல்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜி.எஸ்.டி பவனில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.சி வீரமணி  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தரமற்ற சாலைகள் போடும் நிறுவனங்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை? நீதிபதிகள் கேள்வி

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், ஒரே நாடு ஒரே ரேஷன் முறை குறித்து,  ஆய்வுக்கு பின் கருத்து தெரிவிக்கப்படும் என்றார்.

மேலும் கடந்த தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்த பா.ம.கவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்றும் அ.தி.மு.க ஒரு ஜென்டில்மேன் கட்சி என்பதால், சொன்னது சொன்னபடி வழங்கப்படும் என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Also see...

First published: July 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...