அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசலா...? அமைச்சர் ஜெயக்குமார் பதில்
அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசலா...? அமைச்சர் ஜெயக்குமார் பதில்
அமைச்சர் ஜெயக்குமார்
வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சியின் செயற்குழு முடிவெடுக்கும் எனவும், கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தான் முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சியின் நலன் கருதி, கட்சி எடுக்கக்கூடிய முடிவு. வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சியின் செயற்குழு முடிவெடுக்கும். தனிப்பட்ட அமைச்சர்களின் கருத்துக்களை கட்சியின் கருத்தாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக விற்கும் திமுகவுக்கும் பெரும் போட்டி நிலவும் என்றும், பாஜக தலைமையிலேயே கூட்டணி உருவாகும் என்றும் பாஜகவின் தமிழ் மாநிலத் துணைத் தலைவர் வி.பி துரைசாமி கருத்து தெரிவித்திருந்த நிலையில் அதற்க்கு அளித்த அமைச்சர், கூட்டணி குறித்து வி.பி துரைசாமி கூறியதை பா.ஜ.கவின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது என்றார்.
அதிமுக, பா.ஜ.க. கூட்டணியில் விரிசல் ஏற்படுகிறதா என்ற கேள்விக்கு, கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தான் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் பதிலளித்தார்.
உதயநிதி ஸ்டாலினின் "பிளேபாய்" கருத்து குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், நான் உதயநிதி ஸ்டாலினை "ஸ்வீட்பாய்" என்ற அர்த்தத்தில் "சாக்லேட் பாய்" எனக் கூறினேன் அதற்கு அவர் என்னை "பிளேபாய்" என தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்துள்ளார் அப்படிப் பார்த்தால் "அவர்கள் குடும்பமே பிளேபாய்" குடும்பம்தான் என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக பதிலளித்தார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.