அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று திட்டவட்டமாக கூறிய அமைச்சர் ஜெயக்குமார், இது அதிமுக கூட்டணியில் உள்ளவர்களுக்கும் பொருந்தும் என்றும், பாஜக தலைமை கூறும் கருத்தை மட்டும் தான் ஏற்க முடியும், அங்கிருந்து வந்து போகிறவர்கள் கூறும் கருத்தை எல்லாம் ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நாளை அதிமுகவின் தேர்தல் பொதுக்கூட்டம் நடைப்பெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், அதிமுக வெற்றி இயக்கம், அது அசைக்கமுடியாத எக்கு கோட்டையாக உள்ளது என்றும், அதிமுக கூட்டம் என்பதால் அதிமுக நிர்வாகிகள் நாளை இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றார்.
அதேபோல் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அதை மீறி எதுவும் நடக்காது என்றும் திட்டவட்டமாக தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், பாஜக தலைமை கூறும் கருத்தை தான் ஏற்க முடியும் என்றும், அங்கிருந்து வந்து செல்வர்கள் கருத்தை எல்லாம் ஏற்க முடியாது எனவும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று கூறிய அமைச்சர், இது அதிமுக கூட்டணியில் உள்ளவர்களுக்கும் பொருந்தும் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக போன்று மைனாரிட்டி அரசாக, தொங்கி அரசு நடத்த மாட்டோம் என்ற அமைச்சர், அதிமுக அரிது பெரும்பாண்மையுடன் வெற்றி பெறுவோம் எனக் கூறியும், பெரும்பாண்மையோடு வருபவர்கள் தான் முதல்வரை முடிவு செய்யும். அந்த வகையில் அதிமுக தான் வெற்றி பெற்று எடப்பாடி முதலமைச்சராக இருப்பார் என்றும் தெரிவித்தார்.
Also read... பேரிடர் மீட்புப் பணியில் இறந்த மின்வாரிய ஊழியர் - குடும்பத்திற்கு ஒரு கோடி, அரசு வேலை வழங்குக: வைகோ கோரிக்கை!
திமுகவை நிராகரிக்க வேண்டும் தான் மக்களின் எண்ணமாக உள்ளதாக கூறிய அவர், ஏற்கனவே மக்கள் திமுகவை நிராகரித்தும், ஒதுக்கியும் வைத்துள்ளனர். இந்நிலையில் 'அவர்களே திமுக'-வை நிராகரிக்க வேண்டும் என்று பொருள்படும் வகையில் தான் 'அதிமுக வை நிரகரிப்போம்' என்று பிரச்சாரம் செய்து வருவதாக கூறினார். எனவே திமுக என்ன தான் பண பலத்தை, உள்ளிட்டவற்றை பயன்படுத்தினாலும், அதிமுக காட்டாற்று வெள்ளம் போல் வெற்றி பெறும் என்றும், திமுக மீண்டும் ஆட்சி என்பது பகல் கனவாகவும், கானல் நீராக தான் போகும் எனவும் கூறினார்.
சீமான் எம்ஜிஆர் வரலாற்றை தெரியாமல் பேசுகிறார் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், வாழும் சகாப்தமாக எம்.ஜி.ஆர் இருந்து வருகிறார் என்றும், அவரை தொட்டால், அவர்கள் கெட்டார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.