குடிசைப்பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்துள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்

அரசின் தொடர் நடவடிக்கையால் சென்னையில் உள்ள குடிசை பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

குடிசைப்பகுதிகளில் கொரோனா தொற்று குறைந்துள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்
  • Share this:
சென்னை, எழும்பூரில் உள்ள சுப்பையா தெருவில் சிறப்பு காய்ச்சல் முகாமினை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் துவங்கி வைத்து, பொதுமக்களுக்கு முகக்கசசம், கபசுரக் குடிநீர் மற்றும் மாத்திரைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் இரண்டாயிரம் குடிசை பகுதிகள் உள்ளன. தொடர்ந்து நடவடிக்கையால் குடிசை பகுதியில் கொரோனா தொற்று கட்டுப்பட்டுக்குள் வந்துள்ளது. குடிசை பகுதிகளுல் 20 சதவிகித பாதிப்பு குறைந்துள்ளது.

கொரோனா நோயாளிகளை மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும். அவர்களை தரக்குறைவாக நடத்தக் கூடாது. ஈரானில் இருந்து, 673 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர், மேலும் 65 தமிழக மீனவர்களை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஊரடங்கு காரணாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாத நிலையில், மீண்டும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல அனுமதிப்பது குறித்து பேச்சுவார்த்தைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Also read... உங்களுக்கு கொரோனா பரவாமல் இருக்கனுமா? அசத்தல் ஐடியா கொடுத்த அமைச்சர்சாத்தான்குளம் விவகாரத்தில் சிபிசிஐடி சரியான பாதையில் சென்று வருவதாக, உயர் நீதிமன்றமே பாராட்டியுள்ளது. இதை, எதிர்கட்சி தலைவர் தேவையில்லாமல் விமர்சித்து வருகிறார்.
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading