பணமதிப்பிழப்பு விவகாரத்தில் மக்களே சிறந்த நீதிபதிகள் - அமைச்சர் ஜெயக்குமார்

Demonetisation நடைமுறைக்கு வந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த விவகாரத்தில் மக்கள் தான் சிறந்த நீதிபதிகள், இதற்கான பதில் 2019 தேர்தலில் தெரியும் என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

news18
Updated: November 8, 2018, 2:20 PM IST
பணமதிப்பிழப்பு விவகாரத்தில் மக்களே சிறந்த நீதிபதிகள் - அமைச்சர் ஜெயக்குமார்
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்
news18
Updated: November 8, 2018, 2:20 PM IST
பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவந்த பணமதிப்பிழப்பு விவகாரத்தில் மக்களே சிறந்த நீதிபதிகள் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

வீரமா முனிவரின் 138-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையிலுள்ள அவரது சிலைக்கு தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ஜெயக்குமார், மாபா பாண்டியராஜன் மற்றும் வளர்மதி ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார்  சர்க்கார் சர்ச்சை குறித்த பேசுகையில், ஜெயலலிதா இல்லாமல் இன்று நடிகர்களுக்கு குளிர் விட்டுப் போய்விட்டது. அவர் இருக்கும்போது இது போன்று எந்த படமும் வரவே இல்லை. ஜெயலலிதா இருக்கும்போது இது போன்ற படங்களை எடுத்து இருந்தால் அவர்களுடைய வீரத்தை நாங்கள் மெச்சியிருப்போம். தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக தமிழ் மக்களுடைய உணர்வுகளை சிதைப்பது என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரு விஷயம் என்று கூறினார்.

மேலும், எம்ஜிஆர் உடைய படங்களுக்கு இது போன்ற ஏதாவது சர்ச்சைகள் வந்தனவா என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெயக்குமார், இன்றுள்ள நடிகர்கள் எல்லாம் எம்ஜிஆர் போல ஆக முயற்சிக்கிறார்கள். ஆனால் அது அவர்களால் முடியாது என்று கூறினார்.

அதனை தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், சர்கார் திரைப்படக் குழுவினர் மீது கண்டிப்பாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஜெயலலிதாவினுடைய இயற்பெயர் குறித்து ஏற்கனவே சர்ச்சை நிலவி வரும் சூழலில், இவர்கள் ஏன் அந்தப் பெயரை படத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய கேள்வி. இதை ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் செயலாகத்தான் பார்க்கமுடியும் என்று கூறினார்.

மேலும், பணமதிப்பிழப்பு நடைமுறைக்கு வந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த விவகாரத்தில் மக்கள் தான் சிறந்த நீதிபதிகள்.
இதற்கான பதில் 2019 தேர்தலில் தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.அதிமுகவும் அமமுகவும் இணைவது என்பது கானல் நீர்தான். மேலும், சந்திரபாபு நாயுடு ஸ்டாலின் சந்திப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, 2016 தேர்தலில் கூடத்தான் இதுபோல கூட்டணி அமைத்தார்கள். ஆனால் என்ன பலன் கிடைத்தது. அது போலவே 2019 தேர்தலிலும் அவர்களுக்கு எந்த பலனும் கிடைக்காது என்றும் ஜெயக்குமார் கூறினார்.

Also see...

First published: November 8, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்