Home /News /tamil-nadu /

பெரியார் குறித்து பாஜகவின் சர்ச்சை ட்வீட்... அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்!

பெரியார் குறித்து பாஜகவின் சர்ச்சை ட்வீட்... அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்!

அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

  • News18
  • Last Updated :
பெரியாரை கொச்சைப் படுத்தும் வகையில் பாஜக டிவிட் போட்டது தவறு என்று அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில்
சென்னை வண்ணாரப்பேட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானம் வழங்கும் நிகழ்வை அமைச்சர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் பேசுகையில் எம்.ஜி.ஆர் மறைந்து 32 ஆண்டுகள் ஆனாலும் அவரின் புகழ் இன்று குறையவில்லை. எம்.ஜி.ஆரின் கருத்துகள் இன்னும் 100 ஆண்டுகள் நீடிக்கும். நாங்கள் எல்லாம் இன்று வீரத்தோடு இருப்பதற்கு காரணம் எம்.ஜி.ஆர் தான் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, திமுக நடத்திய பேரணியில்  108 அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தும் 5000 பேருக்கு மேல் கூட்டம் கூடவில்லை.

காவல்துறையினரின் கூட்டத்தைவிட பேரணிக்கு வந்தவர்கள் கூட்டம் குறைவு என தெரிவித்தார். 5000 பேர் மட்டுமே பேரணியில் கலந்துகொண்டது திமுகவிற்கு மிகப்பெரிய கேவலம் என்றும் தெரிவித்தார்.

மேலும் பெரியார் குறித்து பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் போடப்பட்ட பதிவு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், சமூக சீர்திருத்தவாதி பெரியாரை கொச்சைப் படுத்தியது தவறு என்றும் இது கண்டத்திற்குரிய செயல் என்றும் தெரிவித்தார்.

Also Read : தந்தை பெரியாரின் 46-வது நினைவுதினம் - ட்ரெண்டிங்கில் முதலிடம்! 



இந்நிலையில் பெரியார் குறித்த சர்ச்சை ட்வீட்டை தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கி உள்ளது.

 

Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Periyar

அடுத்த செய்தி