• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

நிர்வாகக் காரணங்களுக்காவே சுகாதாரத்துறை செயலாளர் மாற்றப்பட்டுள்ளார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    சென்னை ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ’சென்னையில் கொரோனாவின் வீரியம் அதிகமாக உள்ளதால், மக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, சானிடைசர் பயன்படுத்துதல் போன்றவற்றை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், மூன்றையும் பின்பற்றினால் கொரோனா வராது என்றும் கூறினார்.

    சென்னை முழுவதும் உள்ள 8 லட்சம் முதியவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறிய ஜெயக்குமார், தமிழகத்தில் தான் உயிரிழப்பின் சதவீதம் 0.8 என்று மிகக்குறைவான அளவில் உள்ளதாகவும் கூறினார். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்க முடியாது என்று கூறிய அமைச்சர், கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்யும் கட்சிகள் அரசியலில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் கூறினார்.

    நிர்வாக காரணங்களுக்காகவே சுகாதாரத்துறை செயலாளர் மாற்றப்பட்டதாக விளக்கமளித்த அமைச்சர் அதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றும் கூறினார்.





    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: