மாநிலத்தின் வளர்ச்சிக்காகதான் பிரதமருடன் சந்திப்பு - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

அமைச்சர் ஜெயக்குமார்

மாநிலத்தின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசவுள்ளார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘மாநிலத்தின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடியை முதலமைச்சர் சந்திக்க உள்ளார். உலக புகழ் பெற்ற துண்டு சீட்டு மு.க.ஸ்டாலின், துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்திற்கு வர தயாரானால் நாங்களும் விவாதத்திற்கு தயாராக இருக்கிறோம்.

  யாத்திரை முடிந்தும் வேலுடன் பா.ஜ.கவினர் செல்வது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நடிகர் கமல்ஹாசன் ஒய்வு எடுப்பது ஒவ்வொருவரின் உடல் நலம் சார்ந்தது. உடல் நலம் சார்ந்த விசயத்தில் விமர்சனம் செய்வது ஆரோக்கியமற்ற செயலாக தான் இருக்கும்.

  உலகம் முழுவதும் எம்.ஜி.ஆர் மறைந்து 33 ஆண்டுகள் ஆகியும் கூட இன்னமும் அவரது புகழ் அழியாமல் இருக்கின்ற நிலை. யார் எது வேண்டுமானாலும் பேசலாம். மக்களின் நிலை என்பது மீண்டும் எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அதிமுக இயக்கம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பது. அதிமுக இயக்கம் தான் மீண்டும் தமிழகத்தில் நல்லாட்சியை தரும். 1977ல் இருந்து 1987 வரை 11 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடத்தினார். ஜெயலலிதா எப்படி நல்லாட்சியை தந்தாரோ அதுப்போல் தான் 2021ம் ஆண்டும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி மீண்டும் மலரும்.

  ஆடிட்டர் குருமூர்த்தியை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சிக்கும் அளவிற்கு சென்றது வருத்தம் அளிப்பதாக டி.டி.வி.தினகரன் ட்வீட் செய்தது அந்த ஜீனியஸ் இந்த ஜீனியஸுக்கு சான்று தருவதாக தான் எடுத்து கொள்ள முடியும். 2 மகா ஜீனியஸ் இந்த நாட்டையே கெடுக்கிறது.

  திமுகவை ஓரங்கட்டி எம்.ஜி.ஆரால் அரசியலில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதன் பின்னர் தலை தூக்கினார்கள். ஜெயலலிதா வந்த பின் 2011ல் இருந்து திமுகவை ஒரம் கட்டிவிட்டார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஓரம் கட்டிய பின் அரசியலில் வாழ்வு இல்லை என்ற அடிப்படையில் தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக திமுகவை நிராகரித்து விட்டனர். தமிழகத்திற்கு திமுக தேவை இல்லை என்ற முடிவுக்கு வந்தது தான் தொடர்கிறது. 2021ம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் திமுக நிராகரிக்கப்பார்கள். இந்தியாவில் தமிழகம் ஒரு மாநிலம். மாநில வளர்ச்சிக்காக பிரதமரை டெல்லியில் சந்திப்பது இயல்பானது’ என்று தெரிவித்தார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: