சித்ரா தங்கியிருந்த விடுதிக்கு அமைச்சரின் கார் வந்தது என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சித்ரா தங்கியிருந்த விடுதிக்கு அமைச்சரின் கார் வந்தது என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

ஜெயக்குமார், சித்ரா

மறைந்த நடிகை சித்ரா தங்கியிருந்த விடுதிக்கு அமைச்சரின் கார் வந்தது என்பது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

 • Share this:
  சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘கமல் ஹாசன் சுற்றுப்பயணம் என்பது ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல தான். எட்டு மாதங்களாக உயிர் பயத்தில் வீட்டுக்குள்ளேயே இருந்த கமல்ஹாசன் தேர்தலுக்காக தற்போது சுற்றுப்பயணம் செய்கிறார்.  அரசியலில் பெண்களின் பங்களிப்பும், பெண்கள் முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கட்சி அ.தி.மு.க. 1991 ஆம் ஆண்டிலே 18 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடும் அ.தி.மு.க அரசால் தான் கொண்டு வரப்பட்டது. பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகப்படுத்த வேண்டும் என்ற கருத்தில் தான் துணை முதல்வர் இரண்டரை ஆண்டு பெண்ணும் இரண்டரை ஆண்டு ஆட்சி செய்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

  அந்த அடிப்படையில் துணை முதல்வர் கருத்து வரவேற்கத்தக்கது தான். தனது தொண்டர்களை மகிழ்விப்பதற்காகவே 234 தொகுதியிலும் தனித்து போட்டி என பிரேமலதா பேசியுள்ளார். அதே கூட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது எனவும் பேசியுள்ளார்.

  மறைந்த நடிகை சித்ரா தங்கியிருந்த விடுதிக்கு அமைச்சரின் கார் வந்தது என்று சொல்வதெல்லாம் ஆதாரமில்லாத குற்றச்சாட்டு. இதற்கு பதில் சொல்ல முடியாது. காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: