அமித்ஷா அரசு முறைப்பயணமாகவே தமிழகம் வருகிறார் - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கஃ

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசுமுறைப் பயணமாகவே தமிழகம் வருகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமித்ஷா அரசு முறைப்பயணமாகவே தமிழகம் வருகிறார் - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கஃ
அமைச்சர் ஜெயக்குமார்
  • Share this:
சென்னை அண்ணா சாலையில் தனியார் கடையை துவங்கி வைத்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ’தலைக்கவசம் என்பது மிகவும் முக்கியம். விபத்து ஏற்படும் நேரங்களில் மனிதர்களின் உயிரை காக்க அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், ‘அமித்ஷா சந்திப்பில் கூட்டணி குறித்து பேசுவதற்கு வாய்ப்பு உள்ளதா என்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அமித்ஷா அரசு முறை பயணமாகவே தமிழகம் வருகிறார். இன்று அரசு விழாக்களில் அவர் பங்கேற்கிறார் என்றும் கூட்டணி குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயகுமார் தமிழகத்தில் அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் நேற்று நடத்திய ஊர்வலத்தில் சமூக இடைவெளி, முகக் கவசம் என்று எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றாமல் பேரணி நடத்தி வருவதாக குற்றம் சாட்டினார். இது போன்று செயல்களில் ஈடுபடுவதன் மூலம் தமிழகத்தில் இரண்டாம் அலை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தமிழகத்தில் யார் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் இருந்தாலும் அவர்கள் மேல் கடினமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மண்டல பொறுப்பாளர்கள் மாவட்டச் செயலாளர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர்களுக்கான பணிகள் குறித்து பேசப்பட்டதாக தெரிவித்தார்.
First published: November 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading