இந்திய அணியும் அதிமுகவைப் போல மீண்டு வரும் - அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை

டெல்லிக்கு பாதபூஜை செய்து குடும்பத்திற்காக பதவியை பெற்றது திமுக என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டினார்.

இந்திய அணியும் அதிமுகவைப் போல மீண்டு வரும் - அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை
அமைச்சர் ஜெயக்குமார் - அதிமுக
  • News18
  • Last Updated: July 11, 2019, 1:52 PM IST
  • Share this:
நீட் விவகாரத்தில் தூங்குவது போல நடிக்கும் திமுகவை எழுப்ப முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள இந்திய சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் 262-வது பிறந்தநாளையொட்டி அவரது  சிலைக்கு அதிமுக சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், இந்தியாவிலேயே ஆங்கியலேயர்களை எதிர்த்த முதல் சுதந்தர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் என்று கூறினார்.


தொடர்ந்து நீட் தொடர்பான செய்தியாள்ர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், நீட் விவகாரத்தில் தூங்குவது போல நடிக்கும் திமுகவை எழுப்ப முடியாது என்றும், நீட் தேர்விற்கு காரணமே திமுக, காங்கிரஸ் தான் என்றும் கூறினார்.

மேலும் திமுக ஆட்சியில் தமிழகத்தின் உரிமைகள் தாரை வார்க்கப்பட்டது என்ற அவர், இழந்த உரிமைகளை அதிமுக அரசு மீட்டு வருகிறது எனக் கூறினார். அதுமட்டுமின்றி டெல்லிக்கு பாதபூஜை செய்து குடும்பத்திற்காக பதவியை பெற்றது திமுக என்று குற்றச்சாட்டினார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நான் விளையாடி இருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு பின்னடைவு ஏற்பட்டது போல இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.இந்திய அணியும், அதிமுவும் தோல்வியிலிருந்து மீண்டு வரும் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், இந்தியாவும் வெற்றி பெறும், அதேபோல் அதிமுகவும் வெற்றி பெற்று நிலைத்திருக்கும் எனக் கூறினார்.

 

Also see...

First published: July 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்