• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உதயநிதிக்கு பொறுப்பு: திமுகவில் எப்போது எரிமலை வெடிக்கும் என்பது தெரியாது - அமைச்சர் ஜெயக்குமார்

உதயநிதிக்கு பொறுப்பு: திமுகவில் எப்போது எரிமலை வெடிக்கும் என்பது தெரியாது - அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

  • News18
  • Last Updated :
  • Share this:
உதயநிதிக்கு பொறுப்பு வழங்கியது திமுகவில் பலருக்கு அதிருப்தியாக உள்ளது. அது எப்போது எரிமலையாக வெடிக்கும் என்பது தெரியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

சட்டப்பேரவையில் இன்று மீன்வளம் மற்றும் கால்நடை துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்திற்கு தேவையான முக்கியமான 29 கோரிக்கைகள் தயார் செய்யப்பட்டு பிரதமரிடமும் நிதியமைச்சரிடமும் கொடுக்கப்பட்டுள்ளது.

1. மத்திய அரசு நல்ல பல திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்கும் என நம்பிக்கை உள்ளது. கடல் வழியாக உள்ள தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க கடற்கரை பாதுகாப்பு அமைப்பிற்கு  750 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளது.

2. கங்கை கோதாவரி குண்டாறு ஆகிய நதிகளை இணைப்பதன் மூலம் 400 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்கும். அதனால் இது குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

3. பருவ காலத்தில் மழை அதிகமாகப் பெய்யும் போது வெள்ள பாதிப்பு ஏற்படாமலிருக்க ஒருங்கிணைந்த வெள்ள தடுப்பு திட்டத்திற்கு 7,000 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளது.

4. இயற்கை பேரிடர் நிகழ்வுகளில் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு அனைத்து கடலோர மாவட்டங்களிலும் புதைவடங்கள் அமைக்க 7,000 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளது.

5. சென்னையில் உள்ள 2-ம் கட்ட மெட்ரோ வழித்தடத்திற்கு 82,000 கோடி ரூபாய் கோரப்பட்டது. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு 1980 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளது. இவை தவிர இன்னும் பல திட்டங்கள் குறித்து இன்று அறிவிக்கப்படும் பட்ஜெட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து , திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு பொறுப்பு வழங்கியது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், திமுகவின் பொறுப்பு நியமனம் என்பது அவர்கள் கட்சிக்கு உரிய விஷயம் அதில் நாங்கள் கருத்து சொல்ல முடியாது என்றும் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது என்றும் கூறினார்.

மேலும் அதிமுகதான் மக்கள் கட்சி திமுக மன்னர் கட்சி.  வாரிசுகள் மட்டுமே திமுகவில் பொறுப்பில் இருக்க முடியும். இது குறித்து ஏகப்பட்ட குமுறல்கள் திமுகவினருக்கு இடையே இருந்து வருகிறது.  இது என்றைக்கு எரிமலையாக  வெடிக்கப் போகிறது என்பது தெரியவில்லை என்று கூறினார்.

Also see... நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் ஆசிரியர்கள், தோழிகள் என்ன சொல்கிறார்கள்?





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: