Home /News /tamil-nadu /

"நானும் ரவுடிதான் என்பதை போல செயல்படுகிறார் ஸ்டாலின்" - அமைச்சர் ஜெயக்குமார்

"நானும் ரவுடிதான் என்பதை போல செயல்படுகிறார் ஸ்டாலின்" - அமைச்சர் ஜெயக்குமார்

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

  • News18
  • Last Updated :
    ஸ்டாலின் நானும் ரவுடிதான் என்ற அடிப்படையில் செயல்படுகிறார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 

    சென்னை எழும்பூரில் உள்ள ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆதித்தனார் பிறந்த நாள் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பாமர மக்களும் தமிழ் அறியும் வகையில் மிக எளிமையாக கொண்டு சேர்த்த பெருமை அவருக்கு உண்டு என அவர் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து பேசியவர், திமுகவிற்கு அரசியல் பண்பாடு நாகரீகம் கிடையாது என்றும் பதவி வெறியோடும் ஆதங்கத்தோடும் இருப்பது, ஸ்டாலின் செயல்பாட்டில் தெரிகிறது என்றும் கூறினார். மேலும் எதிர்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அழைப்பிதழில் உரிய மரியாதை அளிக்கப்பட்டுள்ளதாகவும் விழாவில் கலந்துக்கொள்வது அவருடைய விருப்பம் என்றும் தெரிவித்தார். மேலும் அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டாலின் நானும் ரவுடிதான் என்ற அடிப்படையில் செயல்படுகிறார் என குற்றம்சாட்டினார்.

    அதன்பின்னர், திமுக ஆட்சியின் போதுதான் பல்வேறு ஊழல்கள் நடந்தது என்றும் வரலாற்றை ஒருபோதும் மறக்கக்கூடாது எனவும்  அவர் தெரிவித்தார். மேலும் ஸ்டாலின் குடும்ப சொத்து என்ன என்பதை அவர் கணக்கு சொல்வாரா என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். மேலும் ஈழ தமிழர்கள் விவகாரத்தில் வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியாக அணுக வேண்டும் என்று ஸ்டாலின் ஆசைப்படுகிறார். அது விரைவில் நிறைவேற்றப்படும் என்றார்.

    மேலும் கமல் ஒடிசா முதல்வரை சந்தித்து பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த சந்திப்பினால் எந்த மாற்றமும் வர போவது இல்லை என்றார்.  சினிமாவில் நல்ல கருத்துக்களை பரப்பும் வேலையை இயக்குனர்கள் செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.

    ALSO WATCH...

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Aadithanar statue, DMK, Duraikannu, Minister Jayakumar, Stalin

    அடுத்த செய்தி