விரைவில் திமுக ஆட்சி என்று பேசிய திமுக உறுப்பினருக்கு வடிவேலு பாணியில் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார்!

சட்டமன்றத்தில் ஒரு கேள்விக்கு தொடர்புடைய அனைத்து அமைச்சர்களுக்கும் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்று முதலவர் கூறினார்.

விரைவில் திமுக ஆட்சி என்று பேசிய திமுக உறுப்பினருக்கு வடிவேலு பாணியில் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார்!
அமைச்சர் ஜெயக்குமார்
  • News18
  • Last Updated: July 11, 2019, 1:06 PM IST
  • Share this:
விரைவில் திமுக ஆட்சிக்கு வரும் என திமுக உறுப்பினர் சேகர்பாபு சொன்னதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், வடிவேல் காமெடி பாணியில் " வரும்... ஆனா வராது " என பதில் அளித்தார்.

சட்டப்பேரவையில் சமூக நலத்துறை மீதான மானிய கோரிக்கையில் பேசிய திமுக உறுப்பினர் சேகர்பாபு, சமூக நலத்துறைகளின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் அதில் உள்ள குறைபாடுகள் குறித்தும் பேசினார். இறுதியில் திட்டங்களில் உள்ள குறைகளை விரைவில் வரவுள்ள திமுக ஆட்சி பூர்த்தி செய்யும் என பேசினார்.

உடனடியாக குறுக்கிட்ட அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் வடிவேலின் காமெடி டயலாக்கான " வரும்... ஆனா வராது" என பதிலளித்தார். அப்போது அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.


அதன் பின்னர் பேசிய திமுக உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா, சமூக நலத்துறை அமைச்சர் படித்தவர் தானே, அவர் துறை சார்ந்த கேள்விக்கு ஏன் மற்ற அமைச்சர்கள் குறுக்கிட்டு பதில் சொல்கிறீர்கள். பெண் உரிமை பேசும் நீங்கள் ஏன் ஒரு பெண் அமைச்சரை பதிலளிக்க அனுமதிக்க மறுக்குறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த முதல்வர், உறுப்பினர்களுக்கு பதிலளிப்பது அமைச்சர்களின் கூட்டு பொறுப்பு என்றும், ஒரு கேள்விக்கு தொடர்புடைய அனைத்து அமைச்சர்களுக்கும் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு உள்ளதால்தான் பதிலளிக்கிறார்கள், இது கடந்த திமுக ஆட்சியிலும் நடந்துள்ளது. தேவைப்பட்டால் அவைக்குறிப்பை பாருங்கள் என பதிலளித்தார்.

மேலும் படிக்க... ஈரோட்டில் நிலத்தடி நீரையும் விட்டுவைக்காத சாயக் கழிவுகள் மக்கள் வேதனை!
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்