குடும்ப உறுப்பினரான நயன்தாராவுக்கு திமுக உறுப்பினர் அட்டை வழங்கலாம் - அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

குடும்ப உறுப்பினரான நயன்தாராவுக்கு திமுக உறுப்பினர் அட்டை வழங்கலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

குடும்ப உறுப்பினரான நயன்தாராவுக்கு திமுக உறுப்பினர் அட்டை வழங்கலாம் - அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்
அமைச்சர் ஜெயக்குமார்
  • News18 Tamil
  • Last Updated: September 30, 2020, 3:11 PM IST
  • Share this:
மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சென்னை கிரீன்வேஸ் சாலை பகுதியில் 57 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டடத்தை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், சர்வதேச முதியோர் தினம் இன்று. முதியோர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்; இளைஞர்கள் முதியோரை மதிக்க வேண்டும். குறிப்பாக, அரசியலில் முதியவர்களை உதயநிதி மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவர், திமுக ஜனநாயகக் கட்சி இல்லை, ஜமீன் கட்சியாக மாறிவிட்டது என்றார்.

அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு பிறகு இரண்டாகப் பிரிய வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த ஜெயக்குமார், கட்சி பிரிய வாய்ப்பு இல்லை. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கட்சியைச் சேர்ந்தவர்களைத்தான் சந்தித்து பேசுகிறார். அதில் எந்தத் தவறும் இல்லை. அந்தக் கட்சி குறித்து ஆலோசனை நடத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் செயற்குழு நடைபெறும்; அதன்பின்னர் தீர்மானம் நிறைவேற்றப்படும். பெரிய அளவுக்கு எதுவும் இல்லை.

முதலமைச்சர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு அவர், கட்சி உரிய நேரத்தில் அறிவிக்கும். கட்சியின் ஆரோக்கியமான விவாதம் இருந்தது. வெளியில் சொல்லக்கூடாது. காலம் முற்றுப்புள்ளி வைக்கும். பலசோதனைகளைக் கடந்துதான் அதிமுக வெற்றி பெற்று இருக்கிறது. இதற்காக வருத்தப்படவேண்டியது இல்லை. எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாக நடக்கும். அதிமுக ஜனநாயக கட்சி என்பதில் மாற்றமில்லை என்றார்.


Also read: அரசு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் ஓ.பி.எஸ் பெயர் இடம்பெறாதது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஒருங்கிணைப்பாளர் சுற்றுப்பயணம் செல்வதற்கு எந்தத் தடையும் இல்லை. அது அவருடைய சுதந்திரம். கட்சி அவருக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறது. தற்போது எழும் விவாததிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலை வரும். யார் முதலமைச்சர் என்று கட்சி மட்டும்தான் முடிவு செய்யும் என்றார்.

மேலும், குடும்ப உறுப்பினரான நயன்தாராவுக்கு திமுக உறுப்பினர்  அட்டை வழங்கலாம். அதை நான் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், ஒரே நாளில் 72 லட்சம் பேரை எப்படி சேர்க்க முடியும். ஒசாமா பின்லேடன், ட்ரம்ப் உள்ளிட்ட பெயர்களில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதுவொரு ஏமாற்று வேலை அனைத்து பெருமையும் பிரசாத் கிஷோருக்கே சேரும் என்றார்.
First published: September 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading