அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்பது வரலாறு: விஜயை சாடிய அமைச்சர்!

ஆளும் தரப்பை தொட்டால்தான் ஆளாக முடியும் என தொடுகிறார்கள் என்று விஜயின் பேச்சு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்பது வரலாறு: விஜயை சாடிய அமைச்சர்!
விஜய் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார்
  • News18
  • Last Updated: September 23, 2019, 10:34 AM IST
  • Share this:
அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்பது வரலாறு என்று விஜயை சாடியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

கோவாவில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பிய அமைச்சர் ஜெயகுமார் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ஜி.எஸ்.டி கவுன்சில் 37-வது கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. பொறியியல் பணிகளுக்கான ஜி.எஸ்.டி 12% இருந்து 12%-ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


மேலும், 4500 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி மூலம் தமிழகத்திற்கு வர வேண்டி உள்ளது. தமிழகத்தில் 8.17% அளவுக்கு தமிழகம் பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலை மக்கள் நீதி மய்யமும், அமமுகவும் புறக்கணித்துள்ளது குறித்த கேள்விக்கு தினகரன், கமல் போன்றவர்கள் ஒரு சீசனல் பொலிட்டீஷியன்ஸ் என்று தெரிவித்தார்.

கமல்ஹாசன் 5% - 7% வாக்குகளை மட்டும்தான் வாங்குவார் என்பதையும், டிடிவி தேராதா கேஸ் என்பதையும் தான் முன்கூட்டியே சொல்லி இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.வேலூர் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் தப்பித்தோம் பிழைத்தோம் என்ற அளவில்தான் திமுக வெற்றி பெற்றது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

யாரை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே அவர்களை உட்கார வைத்தால் எல்லாம் சரியா இருக்கும் என விஜய் பேசி உள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார்,விஜயோ கவுண்டமணியோ செந்திலோ யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்.

ஆனால் அவர்கள் வந்தால் மக்களுக்கு என்ன செய்ய போகிறார்கள் என்பதைதான் சொல்ல வேண்டும். அதிமுக ஒரு பழுத்த மரம் பழுத்த மரம்தான் கல்லடி படும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

படத்திற்கு விளம்பரம் தேடவே ஆளும் தரப்பை விஜய் சீண்டுகிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், நான் இதனை மறைமுகமாக கூறுகிறேன் ஆனால் நீங்கள் நேரடியாகவே கேட்டுவிட்டீர்கள் என தெரிவித்தார்.

ஆளும் தரப்பை தொட்டால்தான் ஆளாக முடியும் என தொடுகிறார்கள். ஆனால் அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்பது வரலாறு. படம் ஓட வேண்டும் என்பதற்காக எங்கள் மீது இதுபோன்ற விமர்சனங்கள் வைக்கப்படுகிறது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Also see...

First published: September 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading