நிர்மலா தேவி போன்ற கருப்பு ஆடுகள் களையெடுக்கப்படுவர் - ஜெயக்குமார்

news18
Updated: April 16, 2018, 1:44 PM IST
நிர்மலா தேவி போன்ற கருப்பு ஆடுகள் களையெடுக்கப்படுவர் - ஜெயக்குமார்
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்
news18
Updated: April 16, 2018, 1:44 PM IST
பேராசிரியை நிர்மலா தேவி பேன்ற கருப்பு ஆடுகளை உறுதியாக களையெடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

விருதுநகரில் கல்லூரி ஆசிரியை நிர்மலா தேவி மாணவிகளிடம் மதிப்பெண்களுக்காக, உயர் அதிகாரிகளுடன் இருக்க வேண்டும் என்று கூறிய தொலைபேசி ஆடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஆசிரியை மாணவர்களிடம் இவ்வாறு பேசியது மிகவும் கண்டனத்திற்குறியது என்று கூறினார்.

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் குறித்து பேசிய அவர், நீதிமன்றத்தில் காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு உள்ளது. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் ஜெயக்குமார் கூறினார்.

மேலும், மறைந்த முதல்வர் வெளிநாட்டிற்கு அழைத்து செல்வதற்கு அமைச்சர்கள் உதவியாக இல்லை என ராமமோகனராவ் குற்றச்சாட்டிற்கு ஜெயகுமார் கண்டனம் தெரிவித்தார். ராமமோகனராவ் ஆட்சியாளராக செயல்படவில்லை, அரசியல்வாதி போல தான் இருந்தார் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய ஜெயகுமார், ஆசிபா மற்றும் பெண்குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு, அரபு நாடுகளில் கொடுக்கப்படுவது போல, கடுமையான தண்டனைகள் கொடுக்க வேண்டும் என்று ஜெயகுமார் கூறினார்.
First published: April 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்