• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரஜினி - கமல் இணைந்தால்...! தனது பாணியில் ஜெயக்குமார் பதில்

ரஜினி - கமல் இணைந்தால்...! தனது பாணியில் ஜெயக்குமார் பதில்

அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

  • News18
  • Last Updated :
  • Share this:
    இஸ்லாமிய மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை; போராட்டத்தை கைவிட்டு சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

    சென்னையில் இருந்து தமிழக அமைச்சர் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் டெல்லி சென்றனர். அப்போது சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்லிக்கு அரசு முறை பயணமாக செல்கிறோம். விருதுநகரில் நடந்த விழாவில் முதலமைச்சர் இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார். சிறுபான்மை மக்களுக்கு இதய துடிப்பாக அதிமுக அரசும் கட்சியும் உள்ளது. இதனால் இஸ்லாமியர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. சிறுபான்மை மக்களுக்கு நூற்றுக்கும் மேல் எவ்வளவு உயரம் இருக்கிறதோ அந்த அளவுக்கு பாதுகாப்பு அளிப்பது தான் அதிமுக அரசு.

    ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைவதால் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் கிடையாது. ரஜினிகாந்த் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. 1972ல் எம்.ஜி.ஆர்., திமுகவின் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து கட்சியை தொடங்கினார். எம்.ஜி.ஆர். சிறப்பாக 11 ஆண்டுகள் ஆட்சியை நடத்தினார். அதன் பின்னர் ஜெயலலிதா கட்சியை ஒன்றாக்கி 40 லட்சம் தொண்டர்களை ஒன்றரை கோடியாக மாற்றினார்.

    அவரது மறைவுக்கு பின் ஆட்சி 3 மாதத்தில் போய்விடும் என்றனர். ஆனால் முதலமைச்சர் நல்ல திட்டங்களை தந்து ஆட்சியை சிறப்பாக நடத்தி கொண்டு இருக்கிறார். நல்ல ஆட்சி நடந்துக் கொண்டு இருக்கிறது. 2021ல் ஆட்சிக்கு அங்கீகாரம் தரும் வகையில் நல்ல தீர்ப்பை எங்களுக்கு வழங்குவார்கள். நல்ல நிலையில் எழுச்சிமிக்க இயக்கமாக அதிமுக உள்ளது. கட்சி எவரெஸ்ட் நிலைக்கு உயர்ந்து உள்ளது. யார் வேண்டுமானாலும் கட்சியை ஆரம்பித்தாலும் எங்களுடைய வாக்கு வங்கி யில் கை வைக்க முடியாது.

    ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்தால் மீண்டும் 16 வயதினிலே படம் போல் ஒரு நல்ல படம் கிடைக்கலாம்.

    போராட்டம் நடத்துவர்களை அழைத்து முதலமைச்சர் 3 முறை சந்தித்து பேசி உள்ளார். சட்டமன்றத்தில் தெளிவாக பேசியுள்ளார். வண்ணாரப்பேட்டை மக்களிடம் நான் பேசியுள்ளேன். இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று முதலமைச்சர், வருவாய் துறை அமைச்சர் சொல்லியும் இஸ்லாமிய மக்கள் புரிந்து போராட்டத்தை கைவிட்டு சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும்.

    நேற்றும், இன்றும், நாளையும் சசிகலா விவகாரத்தில் தற்போது என்ன நிலையோ அது தான் நிலை. மத்திய அரசை மாநில அரசு சந்திப்பது சகஜம் தான். நிதி உள்பட பல விசயங்கள் பற்றி வெளியே சொல்ல முடியாது.

    மக்கள் கணக்கெடுப்பில் சில ஷரத்துகள் குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்பட்டு உள்ளது. இஸ்லாமிய மக்களுக்கு உணர்வுகளுக்கு மதிப்பளிக்க கூடிய வகையில் அழுத்தம் தரப்படும். மத்திய அரசு பதில் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: