• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரசாயனம் தடவிய மீன்கள் விற்கப்படுவதாக கூறுவது வதந்தி - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

ரசாயனம் தடவிய மீன்கள் விற்கப்படுவதாக கூறுவது வதந்தி - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் தரமான மீன்கள் விற்கப்படுவதாகவும், மீன் சாப்பிட்டால் 100 ஆண்டுகள் வரை நலமுடன் வாழலாம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

  • Share this:
    தமிழகத்தில் தரமான மீன்கள் விற்கப்படுவதாகவும், மீன் சாப்பிட்டால் 100 ஆண்டுகள் வரை நலமுடன் வாழலாம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

    ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை செய்வதை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்று சட்டப்பேரவையில் செய்யூர் எம்.எல்.ஏ ஆர்.டி.சேகர் கேள்வியெழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறுவது வெறும் வதந்தி என்றும் இதனை யாரும் நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

    சுகாதாரத்துறை மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் மீன்கள் விற்பனை செய்யப்படும் இடங்களில் சோதனை மேற்கொண்டு வருவதாக் கூறிய அமைச்சர், மதுரையில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட வெளிமாநில மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: