ஓ.பன்னீர் செல்வம் பற்றி குருமூர்த்தி பேசியது ஆணவத்தின் உச்சம் என்று சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயகுமார் பேட்டியளித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆடிட்டர் குருமூர்த்தி நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் அரசியல் மாற்று என கூறியதற்கு, “அது குருமூர்த்தியின் கருத்தாக இருக்கலாம்” என்று அமைச்சர் கூறினார்.
மேலும், “கடந்த 15 நாட்களாக முதலமைச்சரும், நாங்களும் இதற்கான விளக்கத்தை தெரிவித்துள்ளோம். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சினிமாத் துறையில் பெரிய நட்சத்திரங்களாக ஜொலித்தார்கள் அரசியலில் பெரிய நட்சத்திரங்களாக ஜொலித்தார்கள்.
இவர்கள் எல்லாம் திரைப்பட துறையில் நட்சத்திரங்களாக இருக்கலாம். ஆனால், அரசியலில் பொருத்தவரை ஜொலிக்காத நட்சத்திரங்கள் தான்.
கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து அவர் வாக்கு வங்கி என்னவென்று தெரிந்துவிட்டது. ரஜினிகாந்த் அவர்களும் கட்சி ஆரமிக்கும் பொழுது அதே நிலைமைதான் வருங்காலத்தில் அவருக்கும் ஏற்படும்” என்று ஜெயகுமார் தெரிவிதார்,
துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தர்ம யுத்தம் பற்றிய விமர்சனத்திற்கு பதிலலித்த அவர், “இது ஆணவத்தின் உச்சம், திமிர்வாதம், இவ்வளவு திமிர் கூடாது. நாவடக்கம் தேவை, பல சந்தர்ப்பங்களில் அதிமுகவின் மீது கைவைத்து அதனால் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.
ஒருவர் தான் ஆண் மகன் இல்லை என்றால் தான் சந்தேகம் ஏற்பட்டு மற்றவர்களை, நீ ஆம்பளையா...? நீ ஆம்பளையா...? என்று கேட்பார்கள். முதலில் இவர் ஆண் மகனா என்பதற்கு அவர் பதில் சொல்லட்டும்” என்று கூறினார்.
2021 முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் முதல்வர் வேட்பாளரா என்ற கேள்விக்கு, “வீணாக ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். இது கட்சிக்குள் நடக்கும் விஷயங்கள். உரிய நேரத்தில் கட்சி முடிவு செய்யும்” என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.