காங்கிரஸுடன் கூட்டணியா? அமைச்சர் ஜெயக்குமார் சூசகம்

காங்கிரஸுடன் கூட்டணியா? அமைச்சர் ஜெயக்குமார் சூசகம்
ஜெயக்குமார்
  • Share this:
தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் அ.தி.மு.க கூட்டணி வைக்குமா என்ற கேள்விக்கு, அரசியலில் நாளை எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், அமைச்சர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள், வள்ளுவரின் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர். சென்னை மெரினா கடற்கரையில் வள்ளுவரின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்துக்கு, அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் கே.பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம், "திமுக - காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தி.மு.க பொருளாளர் துரைமுருகன் இத்தனை கடுமையாக விமர்சித்தும் காங்கிரஸ் கட்சியினர் அதனை எப்படி தாங்கிக் கொள்கிறார்கள் என தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியுடன் அ.தி.மு.க கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு, அரசியலில் நாளை எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.


Also see:First published: January 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading