Home /News /tamil-nadu /

கடும் நிதி நெருக்கடியில் தேயிலை தோட்டம் - அமைச்சர் தகவல்

கடும் நிதி நெருக்கடியில் தேயிலை தோட்டம் - அமைச்சர் தகவல்

தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள்

தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள்

Tamil Nadu Assembly : தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பெறும் தினசரி ஊதியத்தினை உயர்த்தி வழங்குவது குறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது என அமைச்சர் தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு தேயிலை தோட்டம் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தமிழக சட்டப்பேரவை தெரிவித்துள்ளார்.

    தமிழக சட்டப்பேரவையில் வினா-விடைகள் நேரத்தின் போது கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்.ஜெயசீலன், தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பெறும் தினசரி ஊதியத்தினை ரூ500 ஆக உயர்த்தி வழங்க அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், தமிழ்நாடு தேயிலை தோட்டம் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது. இருப்பினும், தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பெறும் தினசரி ஊதியத்தினை உயர்த்தி வழங்குவது குறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது என்றார்.

    இந்நிலையில், விளாத்திகுளத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், விளாத்திகுளத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைக்க அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார்.

    சட்டசபையில் அமைச்சர் பேச்சு


    இதற்கு பதிலளித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், விளாத்திகுளத்தில் நிறைய பேருந்து வசதிகள் உள்ளது. அங்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை என தெரிவித்தார்.

    Must Read : செங்கல்பட்டு இரட்டைக் கொலையில் தொடர்புடைய இருவர் போலீசாரால் சுட்டுக் கொலை

    மேலும், எதிர்காலத்தில் வேண்டுமானால் மக்கள்தொகை அடிப்படையில், வாகன பெருக்கத்தின் அடிப்படையில் பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: MK Stalin, TN Assembly

    அடுத்த செய்தி