பாலியல் குற்றச்சாட்டுகளில் யார் ஈடுபட்டாலும் தயவு தாட்சண்யம் இல்லாமல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், மேற்குத்தொடர்ச்சி மலையில் யானையால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க வனத்துறை அமைச்சரிடம் பேசி நிரந்தர தீர்வு ஏற்படுத்த வழி வைக்கப்படும் எனவும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் வனத் துறை மற்றும் வேளாண்துறை இணைந்து இலவசமாக விவசாயிகளுக்கு மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் இலவச மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, திண்டுக்கல் அருகே உள்ள முத்தனம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியின் தாளாளர் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மாணவிகள் பல்வேறு போராட்டங்கள் செய்த நிலையில் கல்லூரியின் தாளாளர் தற்போது வரை தலைமறைவாக உள்ளார். என்ற கேள்விக்கு கல்லூரியில் படித்து வந்த மாணவிகள் மீது தொடரும் பாலியல் தொல்லை யார் கொடுத்தாலும் அவர்கள் மீது, தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்.
பாலியல் சம்பவத்தை யார் செய்திருந்தாலும் அவர்களுக்கு தயவு தாட்சண்யம் பார்க்கப்பட மாட்டாது. கல்லூரியில் படித்து வந்த மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் மேலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது மாணவிகள் என்ன கோரிக்கை வைக்கிறார்களோ? அந்தக் கோரிக்கையை கண்டிப்பாக தமிழக அரசு ஏற்று உரிய முறையில்அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் தமிழக முதல்வர் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவிகளுக்கு பாலியல் ரீதியாகவோ அல்லது வேறு ஏதும் தொந்தரவு செய்தால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து காட்டு யானைகளால் விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன ஏனெனில் கடந்த 2006ஆம் ஆண்டு தமிழக அரசு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்த யானைகளை கும்கி உதவியுடன் அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்கும், அதேபோல் முதுமலை சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் விடப்பட்டது.
தற்போது தமிழக வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் நாங்கள் பேசி உள்ளோம். அதன் அடிப்படையில், அவரை நேரடியாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கொடைக்கானல் மற்றும் கீழ்மலைப் பகுதிகளில் ஆய்வு செய்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று யானைகளை வேறு பகுதிக்கு கொண்டு சென்று விடுவதா, அல்லது மாற்று வழி செய்வதா என்பது குறித்து தற்போது ஆய்வு செய்து வருகிறோம்.
Must Read : ஆடு திருட்டு கும்பலை துரத்திச் சென்ற எஸ்.ஐ கொலை : விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்
விவசாயிகளுக்கும் பயிர்களுக்கும் நிரந்தர தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க உள்ளோம். விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கும் திட்டத்தின் மூலம் மாசற்ற மாநிலமாக உணர்ச்சிகள் இல்லாத மாநிலமாக எதிர்காலத்தில் எந்த ஒரு நச்சும் தாக்காத வண்ணம் சிறந்த மாநிலமாக திகழும். தமிழ்நாட்டில் நல்ல குடிநீர், நல்ல காற்று கிடைக்கும்” இவ்வாறு கூறினார்.
செய்தியாளர் - சங்கர், திண்டுக்கல்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dindigul, Sexual harassment