கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன் காரணமாக தகுதியான நபர்களை கண்டறிவதற்காக நகை கடன் பெற்றவர்களின் பெயர் உள்ளட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
இதற்காக, கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், ஆதார் எண், குடும்ப அட்டை எண், முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்களை சேகரித்து தொகுக்கப்பட்டு கணினி மூலம் விரிவான ஆய்வு செய்யப்பட்டன.
இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை அடமானம் வைத்தவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ. பெரியசாமி அறிவித்துள்ளார்.
Must Read : அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடரும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
அதன்படி, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் நகைக் கடன் பெற்ற பயனாளிகளுக்கு 100% நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், 14 லட்சத்து 40,000 பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gold loan