வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் - அமைச்சர் அப்டேட்

Minister I Periyasamy

*விவசாயிகளுக்கு கலைஞரின் வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ்., விவசாயிகளுக்கு கூடுதல் கடன் வழங்கப்படும் - மதுரை விமானநிலை

 • Share this:
  கடன் சுமையை பொருத்தவரை இந்த அரசாங்கத்திற்கு ஏறத்தாழ ஐந்தே முக்கால் லட்சம் கோடி ரூபாய் பல்வேறு துறைகளில் நிர்வாகம் சரியில்லாத காரணத்தினால் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது  எனவும்., கூட்டுறவு துறையை பொறுத்தவரை கடந்த திமுக ஆட்சியில் இருந்தது போல் மிகச்சிறப்பாக விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் பெண்களுக்கும் என எல்லா வகையிலும் கடன் வழங்கும் எனவும் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

  தொடர்ந்து., புதிய விவசாயிகள், உறுப்பினர்கள் மற்றும் இதுவரை கடன் வாங்காத நபர்கள், கிராம கூட்டுறவு விவசாயக்கடன் சங்கத்தில் வாங்க முடியாதவர்கள் கூட தற்போது ஒரு லட்சத்து 80 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு விவசாயத்திற்கு அதிக கடன் வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.

  Also Read: ‘11 நிமிடம் தான் பாலியல் வன்புணர்வு செய்தார்’: குற்றவாளிக்கு தண்டனையை குறைத்து ஷாக் கொடுத்த பெண் நீதிபதி!

  ஒரு மாத காலத்திற்குள் 900 கோடி கடன் வழங்கும் பணி விரைவில் நடைபெறும் எனவும்.,  அக்டோபர் மாதத்திலிருந்து தமிழகம் முழுவதும் பரவலாக குறுவை சாகுபடி செய்பவர்களுக்கு பின்வரும் காலங்களில் கூடுதலாக கடன் வழங்க இருக்கிறோம் என கூறினார்.
  மேலும்., விவசாயிகளுக்கு கலைஞர் திட்டத்தின் மூலம் வட்டியில்லா கடன் வழங்குகிறோம் .

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அந்த திட்டத்தின் மூலம் 7% வட்டி இல்லாமல் அந்த வட்டியினை அரசாங்கமே செலுத்தும் எனவும் கூறினார். தொடர்ந்து., விவசாயிகளுக்கு கூட்டுறவு துறை மூலம் கூடுதல் கடன் தற்போதைய ஆட்சியில் வழங்கப்படும் எனவும் கூறினார்.

  சிவக்குமார், செய்தியாளர் - மதுரை திருமங்கலம்
  Published by:Arun
  First published: