• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பயிர்கடன் தள்ளுபடியில் ரூ.516 கோடி முறைகேடு - சட்டசபையில் ஆதாரத்துடன் குற்றம்சாட்டிய அமைச்சர் ஐ.பெரியசாமி

பயிர்கடன் தள்ளுபடியில் ரூ.516 கோடி முறைகேடு - சட்டசபையில் ஆதாரத்துடன் குற்றம்சாட்டிய அமைச்சர் ஐ.பெரியசாமி

ஐ பெரியசாமி

ஐ பெரியசாமி

பயிர்க்கடன் தள்ளுபடியில் 516 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும், நாமக்கல், சேலம் மாவட்டத்தில் மட்டும் 503 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூட்டுறவுத்துறைத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    கூட்டுறவுத்துறை மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, ‘பயிர்கடன் தள்ளுபடியை பொறுத்தவரை 81 சதவிகிதம் பேருக்கு ரசீது வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். சாகுபடி பரப்பளவு, பயிருக்கு வழங்க வேண்டிய கடனை விட பல மடங்கு உயர்த்தி வழங்கப்பட்டிருப்பது தெரியவந்திருப்பதாகவும் அதன் மூலம் 516 கோடி ரூபாய் முறைகேடாக வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அதிலும் சேலம் மற்றும் நாமக்கல்லில் மட்டும் 503 கோடி ரூபாய் முறைகேடாக வழங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

    கடன் தள்ளுபடியை எதிர்நோக்கி ஒரு நாளைக்கு முன்பாகவே திட்டம் போட்டு தள்ளுபடி செய்திருப்பதாகவும், பயிர்க்கடன் வழங்கும் போது கூட்டுறவு சங்கங்கள் ஏனையை வசூலையும் கடனாக கொடுத்து விதிமீறலில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் கணினிகள் உள்ளதாகவும் அது சாம்பிரானி போடுவதற்காகவா உள்ளது எனவும் அதில் எதுவுமே பதிவாக இல்லை எனவும் கேள்விஎழுப்பினார்.

    ஈரோடு மாவட்டத்தில் 6 தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கியில் 66 விவசாயிகளுக்கு பிப்ரவரி 21 ஆம் தேதி 54,50,000 பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகவும், சேலத்தில் 12 தொடக்க கூட்டுறவு வேளாண்மை வங்கியில் 2,698 உறுப்பினர்களுக்கு 4.96 கோடி ரூபாய் மட்டுமே வழங்க வேண்டும் என்ற நிலையில் 16.70 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆதாரத்துடன் ஐ.பெரியசாமி விளக்கினார்.

    முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் ஊரான கோச்சடையில் கூட அதிகமாக பணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பதிலளித்தார். 5 பவுன் வரை நகைக்கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 13,91,656 பேர் பல வங்கிகளில் 5,896 கோடி ரூபாய் கடன் பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார்.

    இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்களின் பட்டியல் தயார் செய்துவருவதாகவும் தகுதியுள்ள நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான முடிவை முதல்வர் எடுப்பார் எனவும் அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலளித்தார். கூட்டுறவு வங்கியில் முறைகேடாக கடனை பெற்று கந்துவட்டிக்கு விடுகிறார்கள் எனவும் இது சாதாரண மக்களின் வரிப்பணம் என்பதால் ஏழைகளுக்கு சென்றடைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கூட்டுறவு வங்கிகளில் வட்டிக்காரர்கள் ஆக்கிரமிப்பை ஒழிக்க வேண்டும் எனவும் இதனால் கிராமங்களில் உள்ள மாணவர்கள் உட்பட அனைவரையும் கூட்டுறவு சங்கங்களில் கொண்டு வர முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலளித்தார். கூட்டுறவு சங்கங்களில் தவறுகள் நடைபெறாமல் இருப்பது பொது நீதியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: