பணிக்கு திரும்ப டாக்டர்களுக்கு நாளை காலை வரை அவகாசம்... அமைச்சர் கெடு!

அமைச்சர் விஜயபாஸ்கர்

கோவை, கன்னியாகுமரி, கரூர், நாகை, புதுக்கோட்டை, நீலகிரி, தூத்துக்குடி, விருதுநகர், திருவள்ளூர், தேனி ஆகிய  மாவட்டங்களில் அனைத்து மருத்துவர்களும் பணிக்கு வந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் பணிக்கு செல்ல நாளை காலை வரை அமைச்சர் விஜயபாஸ்கர் கெடு விதித்துள்ளார்.

  காலமுறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்குவது, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ பணியிடங்களை உயர்த்துவது, மருத்துவ மேற்படிப்புகளில் இடஒதுக்கீடு ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

  சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை வளாகத்தில், 7-வது நாளாக இன்றும் மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். உண்ணாவிரதம் மேற்கொண்ட 5 பேரில் 4 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் மூன்று அரசு மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

  இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவர்கள் படிப்படியாக பணிக்கு திரும்புகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

  மேலும், போராட்டத்தில் தற்போது ஈடுபடும் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப நாளை காலை வரை அமைச்சர் விஜயபாஸ்கர் கெடு விதித்துள்ளார்.

  கோவை, கன்னியாகுமரி, கரூர், நாகை, புதுக்கோட்டை, நீலகிரி, தூத்துக்குடி, விருதுநகர், திருவள்ளூர், தேனி ஆகிய  மாவட்டங்களில் அனைத்து மருத்துவர்களும் பணிக்கு வந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

      

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published: