முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ‘குட்டி 32 அடி பாய்கிறது’: உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் புகழாரம்!

‘குட்டி 32 அடி பாய்கிறது’: உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் புகழாரம்!

udayanithi stalin

udayanithi stalin

ஸ்டாலின் 16 அடி பாய்ந்தால் அவரது மகன் 32 அடி பாய்வது போல் செயலாற்றுகிறார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தாய் 16 அடி பாய்ந்தால் குட்டி 32 அடி பாய்கிறது என உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்ட திமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று வாலாஜா ஒன்றியத்தில் திமுக சார்பில் ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், கைத்தறி துணிநூல் துறை அமைச்சருமான காந்தி கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

அப்போது பேசிய அவர், திமுக பொறுப்பேற்று 5 மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் சொன்ன வாக்குறுதிகளை மட்டும் இல்லாமல் எல்லாவற்றையும் நிறைவேற்றிக் கொண்டிருப்பவர் ஸ்டாலின் எனவும், ஒவ்வொரு நாளும் புதிய திட்டங்களை அறிவிப்பதால் உலக அளவில் அவர் பாராட்டுகளை பெற்று வருவதாகவும் கூறினார்.

கடந்த காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக 60% வெற்றி பெற்றதாகவும், தற்போது திமுக ஆட்சியில் நடைபெறும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் 100% வெற்றி பெற வேண்டும் என கூறினார்.

உதயநிதிக்கு புகழாரம்:

இனிவரும் காலங்களில் 50 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் திமுகவின் ஆட்சியே தொடரும் எனவும், வேறு ஆட்சி தமிழகத்தில் அமைய வாய்ப்பில்லை என்று கூறிய அவர், தாய் 16 அடி பாய்ந்தால் குட்டி 32 அடி பாயும் என்ற பழமொழியை சுட்டிக்காட்டி ஸ்டாலின் 16 அடி பாய்ந்தால் அவரது மகன் 32 அடி பாய்வது போல் செயலாற்றுகிறார் என உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்து பேசினார் அமைச்சர் காந்தி.

First published:

Tags: DMK, MK Stalin, News On Instagram, Udhayanidhi Stalin