ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

'இதுதான் பசங்களா முக்கியம்..' விளையாட்டுப் போட்டிக்குச் சென்ற மாணவர்களுக்கு உதயநிதியின் சூப்பர் அட்வைஸ்!

'இதுதான் பசங்களா முக்கியம்..' விளையாட்டுப் போட்டிக்குச் சென்ற மாணவர்களுக்கு உதயநிதியின் சூப்பர் அட்வைஸ்!

உதயநிதி

உதயநிதி

Udhayanidhi stalin: ஆந்திரப்பிரதேச மாநிலம், குண்டூரில், ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கிடையே தேசிய விளையாட்டுப் போட்டிகள் நாளை தொடங்குகின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

போட்டிகளில் வெற்றி பெறுவது இலக்கு என்றாலும், அதில் கலந்து கொள்வது மிக முக்கியம் என தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க செல்லும் தமிழ்நாடு பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.

ஆந்திரப்பிரதேச மாநிலம், குண்டூரில், ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கிடையே தேசிய விளையாட்டுப் போட்டிகள் நாளை தொடங்குகின்றன. 22-ம் தேதிவரை நடைபெற உள்ள இந்தப் போட்டியில், சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 177 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, கோ கோ, ஓட்டப்பந்தயம், செஸ், நீச்சல், குத்துச்சண்டை உள்ளிட்ட பிரிவுகளில் இவர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கு சென்னையில் கடந்த ஒரு மாதமாக பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில், அது தங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்குபெறும் தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மத்தியில், மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார். சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது பேசிய அவர், போட்டிகளில் ஜெயிப்பது தோற்பது முக்கியம் அல்ல, கலந்து கொள்வது தான் முக்கியம் என பேசினார்.

அதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் தங்களுக்கான கோரிக்கைகளை முன்வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அப்போது மாணவர் ஒருவர் குத்துச்சண்டை போட்டிக்கு பயிற்சி பெற தனக்கு உபகரணங்கள் தேவைப்படுகிறது என கோரிக்கை விடுத்தார். அவருக்கு உடனடியாக அந்த உதவி செய்யப்படும் என அமைச்சர் உதயநிதி உறுதியளித்தார்.

First published:

Tags: Udhayanidhi Stalin