Home /News /tamil-nadu /

சாலைப் பணிகளுக்கு நில எடுப்பு செய்வதற்காக 5 சிறப்பு DRO நியமனம் - அமைச்சர் எ.வ.வேலு

சாலைப் பணிகளுக்கு நில எடுப்பு செய்வதற்காக 5 சிறப்பு DRO நியமனம் - அமைச்சர் எ.வ.வேலு

எ.வ.வேலு

எ.வ.வேலு

TN Assembly : மாவட்டங்களை இணைக்கும் சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்றும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

    தமிழக சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மணப்பாறையில், திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி 7.5 கி.மீ நீளத்துக்கு புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி முடிவுறும் தருவாயில் உள்ளது என தெரிவித்தார்.

    இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டவுடன், நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று, பின் புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கும் என்றும் கூறினார்.

    மேலும், தமிழ்நாட்டில் ரயில்வே லைன் மீது மேம்பாலம் அமைத்தல், சுரங்க பாலம் அமைத்தல் மற்றும் நிலம் கையகப்படுத்துதலில் எழும் சிக்கல்கள், தாமதமாவதோடு, திட்டச் செலவு உயருவது உள்ளிட்ட பிரச்சனைகளைத் தீர்க்க, அரசால் அறிவிக்கப்பட்டுள்ள சாலைப் பணிகளுக்கு நில எடுப்பு செய்வதற்காக 5 சிறப்பு டிஆர்ஓ (DRO) -க்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    Must Read : முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பேச்சு.. நள்ளிரவில் பாஜக நிர்வாகி வீட்டில் குவிந்த போலீஸ்- குமரியில் பரபரப்பு

    அதேபோல், மாவட்டங்களை இணைக்கும் சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்றும் பணி விரைவில் தொடங்க இருப்பதாகவும் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: TN Assembly

    அடுத்த செய்தி