திமுக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் - அமைச்சர் எ.வ.வேலு உறுதி

எ.வ.வேலு

தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க நிறைவேற்றும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

 • Share this:
  திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் உறுதியாக படிப்படியாக நிறைவேற்றப்படும் என அமைச்சர் எ.வ.வேலு உறுதிப்பட கூறினார்.

  சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் மீதான விவாதத்தின்போது பேசிய பொள்ளாட்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாட்சி ஜெயராமன், திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதிகள் எதுவும் ஆளுநர் உரையில் இல்லை என குறிப்பிட்டார்.

  அதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ஆளுநர் உரையில் திட்டங்கள் இல்லை என கூறுவது ஏற்கமுடியாது என்றும் அதிமுக அரசு எவ்வளவு கடனை எங்களுக்கு சுமத்திவிட்டு சென்றுள்ளது என்பதை வெளிக்கொண்டு வரவே ஜூலை மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளதாகவும், "சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்" நிதி இருந்தால் தான் திட்டம் செயல்படுத்த முடியும் என கூறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும், இன்னும் 5 ஆளுநர் உரை, 5 நிதிநிலை அறிக்கை உள்ளதாக குறிப்பிட்ட அவர், திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகள், கடந்த ஆட்சிக்காலத்தில் அறிவித்து செயல்பாட்டில் இருக்கும் திட்டங்கள் என அனைத்து வாக்குறுதிகளுக்கான திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றுவார் எனவும் தெரிவித்தார்.
  Published by:Karthick S
  First published: