ECR நான்கு வழிச்சாலை - பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தகவல்
ECR நான்கு வழிச்சாலை - பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தகவல்
எ.வ.வேலு
ECR 6 Way Road Project | தற்போது மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலையிடம் சாலை போடும் பணிகள் ஒப்படைக்கப்பட்டு விட்டதால், கிழக்கு கடற்கரை சாலையில் 6 வழி சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
கிழக்கு கடற்கரை சாலையை 4 வழி சாலையாக மாற்றுவதற்கான பணிகள் மத்திய அரசால் நடைபெற்று வருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
கேள்வி நேரத்தில் பேசிய அமைச்சர், கிழக்கு கடற்கரை சாலை என்று கலைஞர் தான் பெயர் சூட்டியதாகவும், கிழக்கு கடற்கரை சாலையானது பாண்டிச்சேரி வரை 135 கிலோமீட்டர் தூரம் உள்ளது, 2002 டிக்கோவும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து சாலை போடும் பணி நடைபெற்றது என்றும் ஆனால் தனியார் நிறுவனம் வெளியேறியதால், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகம் மூலமாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்க விரிவாக்க பணிக்கு 275 கோடி ரூபாய் வங்கிக் கடன் பெறப்பட்டதாகவும், பாண்டிச்சேரியிலும் மாமல்லபுரத்திலும் சுங்கச் சாவடிகள் அமைத்து அதில் வரும் பணத்தின் மூலம் கடனை அடைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஆனால், தற்போது மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலையிடம் சாலை போடும் பணிகள் ஒப்படைக்கப்பட்டு விட்டதால், கிழக்கு கடற்கரை சாலையில் 4 வழி சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். மேலும், சாலை அமைக்கும் வரை சுங்க கட்டணம் தமிழக அரசுக்கு கிடைக்கும் என்றும் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.