Home /News /tamil-nadu /

ஓ.எம்.ஆர் சாலையில் விரைவில் பாலம் அமைக்கப்படும்- அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

ஓ.எம்.ஆர் சாலையில் விரைவில் பாலம் அமைக்கப்படும்- அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

எ.வ.வேலு

எ.வ.வேலு

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் பாலம் அமைக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

    சென்னை மத்திய கைலாஷ் ஓ.எம்.ஆர் சாலையில் பாலம் கட்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

    சட்டப்பேரவையில் இன்று பொதுப் பணித்துறை மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. மானியக்கோரிக்கை பதிலுரையில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, ‘சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும் பாதி நாட்கள் சென்னையில் தங்கி இருக்க வேண்டிய நிலை உள்ளதால், சென்னை சீராக இருந்தால் தான் மாநிலம் சீராக இருக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

    மேலும், சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 24 பணிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், 117 கோடி ரூபாய் செலவில் வடிகால் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

    சென்னை ஓ.எம்ஆர் சாலையில் மத்திய கைலாஷ் பகுதியில் பாலம் கட்ட ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு உள்ளதாகவும், பணிகளை விரைவில் தொடங்கும் வகையில் ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்தி வருவதால், இந்த பாலப் பணிகள் விரைந்து முடிக்கப்படும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    தமிழ்நாட்டில் 3.5 லட்சம் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.. TNPSC குறித்து முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

    மேடவாக்கம், வேளச்சேரி, தாம்பரம் புறவழிச்சாலையில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்கள் இரண்டொரு நாட்களில் முதலமைச்சரின் அனுமதி பெற்று திறந்து வைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், ‘சென்னை அண்ணாசாலையில் தேனாம்பேட்டை முதல் எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, எஸ்.ஐ.இ.டி சந்திப்பு செனடாப் சந்திப்பு ,நந்தனம் சந்திப்பு மற்றும் சிஐடி சாலை சந்திப்புகளை கடைந்து சைதாப்பேட்டை பேருந்து நிலையம் வரை 485 கோடி மதிப்பில் உயர்மட்ட சாலை அமைக்கப்படும்.

    ஈரோடு, கரூர், திருச்சி மாவட்டங்களில் மொத்தம் ஒன்பது ஆற்றுப்பாலங்கள் 136.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். பொதுப்பணித் துறையில் காலியாக உள்ள 308 உதவி பொறியாளர் பணியிடங்கள் இந்த நிதி ஆண்டில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்து நிரப்பப்படும். அனைத்துக் கால நிலைகளிலும் தாங்கும் தடையற்ற போக்குவரத்து என்ற திட்டத்தின் கீழ் 435 தரை பாலங்களை, உயர்மட்ட பாடங்களாக 1,105 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டும். கோவை மாநகருக்கு மேற்கு வட்டச்சாலை பகுதி-1, திருச்செங்கோடு நகர் மற்றும் திருவண்ணாமலை நகருக்கு புறவழிச்சாலை ரூபாய் 500 கோடி மதிப்பில் அமைக்கப்படும்’ என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published:

    அடுத்த செய்தி