தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று நீர்வளத்துறை மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் மீது பதிலுரை வழங்கிய அமைச்சர் துரைமுருகன், தடுப்பணை கட்டுவதை இந்த அரசு கைவிடாது என தெரிவித்தார்.
மேலும் கதவணை கட்டுவதை விட்டு விட்டீர்கள் என ஒ.எஸ்.மணியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த துரைமுருகன் ; ஆம் நாங்கள் இப்போது தான் வந்திருக்கிறோம். பாதி நாள் கொரோனா-வில் போச்சு, பாதி நாள் வெள்ளத்தில் போச்சு, பாதி நாள் இப்படி போச்சு.
நீங்கள் கதவணை கட்டினீர்கள் அதை இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் கடன் வாங்கி கட்டுனீர்கள். கடன் வாங்கி கட்ட கூடாதா? என்றால் கட்டலாம், ஆனால் NABARD-இல் NDA என்ற பிரிவு இருக்கு. அவன் மீட்டர் வட்டிக்கு மேல் வட்டி காரன் என்றார். இதனால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது. அப்போது சிரிக்காரு பாரு முன்னாள் முதல்வர் என்று எடப்பாடி பழனிசாமியை பார்த்து குறிப்பிட்டார்.
Also Read : பல்கலைக்கழகங்களுக்கு கட்டாய நுழைவுத் தேர்வு- எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
தொடர்ந்து பேசிய அவர், 7.85% வட்டி, அந்த கடனுக்கு. கதவனை கட்டுவதை கூட்டி பார்த்தால் 4,373 கோடி. இதற்கு மாசம் 14 கோடி வட்டி கட்ட வேண்டும். நீங்க வாங்கி வச்சிட்டு போயிட்டீங்க. நாங்கள் வட்டி கட்டி வருகிறோம். கடன் வாங்கலாம், 7.85% வட்டியில் வாங்கலாமா? என முதலமைச்சர், நிதித்துறை செயலாளரிடம் கேட்டேன் ஆனால் நமக்கு ஒத்து வராது என கூறிவிட்டார்கள்.
எங்கள் முயற்சியில் கொஞ்சம் குறைந்த வட்டியில் யாராவது இருந்தால் கடன் வாங்கி பணிகள் செய்யப்படும் என பேசியதும் பேரவையில் சிறிது நேரம் கலகலப்பானது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Durai murugan, TN Assembly