ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 கொடுப்பதற்காக சில்லறை மாற்றிக் கொண்டிருக்கிறோம் : அமைச்சர் துரைமுருகன்

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 கொடுப்பதற்காக சில்லறை மாற்றிக் கொண்டிருக்கிறோம் : அமைச்சர் துரைமுருகன்

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

மக்களுக்காக இவ்வளவு செய்தும் நீங்கள் எனக்கு வாக்களிக்கவில்லை. இருந்தாலும் நான் உங்களுக்கு என் கடமைகளை செய்து வருவதாக துரைமுருகன் நகைச்சுவையாக தெரிவித்தார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்காக சில்லரை மாற்றிக் கொண்டுள்ளோம் விரைவில் வழங்குவோம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

  கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பல முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு அறிவித்து இருந்தது. தமிழ்நாட்டில் குடும்ப தலைவிக்கு மாதம்  ரூ.1000 வழங்கும் திட்டத்தை திமுக தேர்தலின் போது அறிவித்து இருந்தது. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பெண்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. திமுக அளித்த வாக்குறுதிகளில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாணவிகளுக்கு உதவித்தொகை, பெட்ரோல் விலை குறைப்பு போன்றவை நிறைவேற்றப்பட்டது.

  எனினும் பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படாமல் உள்ளது.  கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. மக்கள் இடையே எப்போது இந்த திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

  இந்த நிலையில்,குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்காக சில்லரை மாற்றிக் கொண்டுள்ளோம் விரைவில் வழங்குவோம் என அமைச்சர் துரைமுருகன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  மேலும் படிக்க: ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம், திருமாவளவன் பேரணி நடத்த அனுமதி மறுப்பு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

  வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பொன்னை ஆற்றின் குறுக்கே ரூபாய் 40 கோடியில் கட்டப்பட உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி பல்வேறு புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. மு.க.ஸ்டாலின் உடைய ஆட்சி மக்களோடு மக்களாக இருந்து தொண்டு செய்யும் ஆட்சி. அதன்படி நாங்கள் செய்து வருகிறோம்.

  கல்லூரிக்கு செல்லும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம். குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்காக சில்லரை மாற்றிக் கொண்டுள்ளோம் விரைவில் திட்டத்தினை துவங்கி வழங்குவோம் என்றார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: DMK, Duraimurugan