ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

`நாக்கை அறுப்பேன்’ என்று சர்ச்சையாகப் பேசியதற்கு அமைச்சர் விளக்கம்!

`நாக்கை அறுப்பேன்’ என்று சர்ச்சையாகப் பேசியதற்கு அமைச்சர் விளக்கம்!

அமைச்சர் துரைகண்ணு

அமைச்சர் துரைகண்ணு

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  தஞ்சையில் நேற்று முன்தினம் அதிமுகவைப் பற்றி தவறாக பேசினால் யாராக இருந்தாலும் நாக்கை அறுப்போம் என்று பொது கூட்டத்தில் வேளாண் துறை அமைச்சர் துரைகண்ணு பேசினார்.

  அது தொடர்பாக நிருபர்கள் அவரிடம் கேட்டபோது, ``நான் கிராமத்து பாணியில் பேசினேன். நாக்கு அழுகிவிடும் என்று சொல்வதற்க்கு பதிலாக அறுப்பேன் என்று வந்து விட்டது. இதைத்தவறாக எடுத்துகொள்ள வேண்டாம். நான் யாறையும் திட்டமிட்டு குறிப்பிட்டு பேசவில்லை. தவறாக வாயில் வந்துவிட்டது’’ என்று கூறினார்.

  முன்னதாக செப்டம்பர் 25-ம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், வைத்திலிங்கம் மற்றும் வேளாண்துறை அமைச்சர் துறைகண்ணு ஆகியோர் கலந்துக்கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் துரைக்கண்ணு, ``பொற்கால ஆட்சி நடைபெறும் தமிழகத்தில் குற்ற ஆட்சி நடைபெறுவதாக யாராவது கூறினால், அவர்களின் நாக்கை அறுப்பேன். திமுகவுக்கு ஊழலைப் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. தமிழகத்தில் ஊழலை அறிமுகப்படுத்தியவர்களே இவர்கள் தான்' என்று அமைச்சர் துரைகண்ணு பேசினார்.

  Published by:Ilavarasan M
  First published:

  Tags: Controversial speech, Minister, Minister Duraikannu