மேகதாது அணைத் திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது - அமைச்சர் துரைமுருகன்

துரைமுருகன்

காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான ஆரம்பகட்டப் பணிகளை கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளதாக வெளியான செய்தி குறித்து  தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், தானாக முன்வந்து விசாரணை நடத்தியது.

  அப்போது, அணை விவகாரத்தில் ஆய்வுசெய்து ஜூலை 5-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க ஒரு குழுவை அமைத்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

  இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு தடைவிதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் 2018-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதேபோல, கர்நாடக நீர்வளத் துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு எதிராக 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்ததாகவும், இந்த இரு மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேகதாது அணை திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: