• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • முல்லைப்பெரியாறு அணையில் இன்று ஆய்வு மேற்கொள்கிறார் அமைச்சர் துரைமுருகன்

முல்லைப்பெரியாறு அணையில் இன்று ஆய்வு மேற்கொள்கிறார் அமைச்சர் துரைமுருகன்

முல்லை பெரியாறு அணை

முல்லை பெரியாறு அணை

அக்டோபர் 29ஆம் தேதி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து இடுக்கி அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

  • Share this:
    தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முல்லைப்பெரியாறு அணையில் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். இந்த ஆய்வில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி உள்ளிட்டோரும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    கேரளாவில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 138 அடியை எட்டியது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த தமிழக பொதுப்பணித்துறை ஆயத்தமான நிலையில், கேரள அரசு முட்டுக்கட்டை போட்டது.

    மேலும், தமிழக அரசு தரப்பில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்காத நிலையில், அக்டோபர் 29ஆம் தேதி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து இடுக்கி அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கேரளாவின் இச்செயலுக்கு தமிழ் நாட்டைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்லும் அமைச்சர், அங்கிருந்து சாலை மார்க்கமாக செல்கிறார்.

    Must Read : தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்

    இந்த ஆய்வில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி உள்ளிட்டோரும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: