Home /News /tamil-nadu /

முல்லைப் பெரியாறு அணையின் சூப்பர்வைசர் கமிட்டிக்கு கூடுதல் அதிகாரம்- அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

முல்லைப் பெரியாறு அணையின் சூப்பர்வைசர் கமிட்டிக்கு கூடுதல் அதிகாரம்- அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

துரைமுருகன்

துரைமுருகன்

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் துரை முருகன் விளக்கம் அளித்துள்ளார்.

    முல்லைப் பெரியாறு அணையின் சூப்பர்வைசர் கமிட்டிக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது குறித்து முதலமைச்சர் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் உடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

    உச்ச நீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணைக்கு 7.5.2005 அன்று சூப்பர்வைசர் கமிட்டி குழு அமைக்க ஆணையிட்டது. அன்று முதல் இந்த கமிட்டி நடைமுறையில் உள்ளது. இந்த கமிட்டியின் வேலை அணை பாதுகாப்பாக இருக்கின்றது என்பதனை ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கை எடுப்பது. இந்த கமிட்டி தெரிவித்த சில வேலைகளை செய்வதற்கு கேரள அரசு தடையாக உள்ளது. இந்த கமிட்டிக்கு கூடுதல் அதிகாரம் கொடுப்பது சரியா என்ற கோரிக்கை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

    தாலிக்குத் தங்கம் திட்டத்துக்கு குரல் கொடுத்த விஜயதாரணி- மலர்களைக் கொடுத்து நன்றி தெரிவித்த அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள்

    நேற்றைய தினம் மத்திய நீர் ஆணையம் ஒரு அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து தலா ஒரு தொழில்நுட்ப வல்லுநர்கள் போடலாம் என்றும், இந்த குழு அளிக்கும் தகவல்களை அந்த மாநில தலைமைச் செயலாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதலமைச்சர், மூத்த வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Mullai Periyar Dam

    அடுத்த செய்தி