• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கர்நாடகா அரசு காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயன்றால் தமிழக அரசு தடுக்கும் - அமைச்சர் துரைமுருகன்

கர்நாடகா அரசு காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயன்றால் தமிழக அரசு தடுக்கும் - அமைச்சர் துரைமுருகன்

துரைமுருகன்

துரைமுருகன்

காவிரி ஆற்றின் குறுக்கே எந்தப் பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு முயன்றாலும் தமிழக அரசு தடுக்கும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
கர்நாடாகாவின் மேகதாது பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு அம்மாநில அரசு முயற்சி செய்துவருகிறது. கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவருகிறது. இந்தநிலையில், மேகதாது அணை பிரச்சனைக் குறித்து கர்நாடகா முதலமைச்சர் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கைக்கு தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘மேகதாதுவில் அணைக்கட்டும் திட்டத்தை காவேரி ஆற்றின் குறுக்கே சட்டத்திற்குட்பட்டு கர்நாடகா செயல்படுத்தும் என்று கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களுக்கு அறிக்கையாக வழங்கியுள்ளார்.

இந்நிலையில், மேகதாது பிரச்சனைக் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜீலை4-ஆம் தேதி கர்நாடகா முதலமைச்சருக்கு எழுதிய பதில் கடிதத்தில் தமிழ்நாடு விவசாயிகள் இலட்சக்கணக்கான ஏக்கரில் குறுவை மற்றும் சம்பா நெல் பயிர் செய்வதற்கு காவேரி நீரையே நம்பியிருக்கும் நிலையில் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மேகதாது அணை திட்டத்தை கர்நாடகா அரசு கைவிட வேண்டும். அதை செயல்படுத்தக் கூடாது என கடுமையாக வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன்களை பாதுகாத்திட மேகதாதுவிலோ அல்லது வேறு எந்த ஒரு இடத்திலோ அணைக்கட்டுவதற்கு கர்நாடகா அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்ப்பதோடு, அதை தடுத்து நிறுத்துவதற்கு சட்ட விதிமுறைகளுக்குட்பட்டு அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: