எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனை காப்பாற்றாமல் விட்டுவிட்டனர் - அ.தி.மு.க மீது அமைச்சர் துரைமுருகன் தாக்கு

துரைமுருகன்

கொரோனா முதல்அலையின்போது உரிய நடவடிக்கை எடுக்காமல் அப்போதைய எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனை பாதுகாக்கத் தவறிவிட்டனர் என்று அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

 • Share this:
  எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசினார். கடந்த மார்ச் 7ம் தேதி தமிழகத்தில் முதல் தொற்று கண்டறியப்பட்டது. அன்று முதல் தேர்தல் அறிவிப்பு வரை சிறப்பாக செயல்பட்டு அவற்றை கட்டுப்படுத்தினோம். அப்போது நோய்த்தொற்றை கண்டு ஓடி ஒளியும் நிலை இருந்தது. அப்படிப்பட்ட சூழலில் அதிமுக அரசு கடுமையாக போராடி நோயை கட்டுக்குள் கொண்டுவந்தது. நோய் அறிகுறி எப்படி இருக்கும் என்று தெரியாத சூழலில் கூட மருத்துவர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றினர். நோயை குணப்படுத்த தேவையான மருந்துகள் கையிருப்பு இருந்தன. இந்தியாவிலேயே ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை அதிக அளவில் மேற்கொண்ட மாநிலமாக தமிழ்நாடு இருந்தது. பிரதமருடன் நடைபெற்ற ஆலோசனையின் போது தமிழகத்தில் எடுத்த தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வைத்தேன். பிரதமர் தமிழ்நாட்டை பாராட்டினார்.

  அதேபோல் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையை மற்ற மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டுமென தமிழகத்தை பெருமைப்படுத்தினார். நானே நேரடியாக 32 மாவட்டங்களுக்கு சென்று மாவட்ட நிர்வாகத்தினர் உடன் நேரடியாக ஆலோசனை மேற்கொண்டேன். தமிழகத்தில் அதிகமான காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டன. இதனால் ஏராளமான பொதுமக்கள் பயன் அடைந்தனர்’ என்று தெரிவித்தார்.

  அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், ‘அ.தி.மு.க ஆட்சி காலத்தை விட தி.மு.க ஆட்சி காலத்தில் அதிகமான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவிற்கு தமிழ்நாடு முன்மாதிரியாக இருப்பதாக பிரதமர் தி.மு.க அரசை பாராட்டினார்’ என்று தெரிவித்தார்.

  எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘பரிசோதனை முடிவுகளை 12 மணிக்குள் வழங்கும் வகையில், கூடுதல் பரிசோதனை கருவிகளை பயன்படுத்தி நடவடிக்கை எடுத்தோம்’ என்று தெரிவித்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், ‘கொரோனா தடுப்பு நடவடிக்கை என்ன எடுத்துள்ளீர் என நானே பேரவையில் கேட்டேன். அதற்கு பதிலளித்த அப்போதைய முதல்வர், உங்களுக்கு வயதாகிறது. நீங்கள் பயப்பட வேண்டாம். உங்களுக்கு கொரோனா வராது என்று சொன்னார். நாங்கள் சொல்லும் போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. கொரோனா ஆரம்ப கட்டத்தில் சட்டபேரவை நடக்கும் போது, மாஸ்க் சானிடைசர் வழங்க நான் கோரிக்கை வைத்தேன். ஆனால், உங்களுக்கு எதுவும் ஆகாது உங்களை நாங்கள் காப்பாற்றுவோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால், நாங்கள் தான் எங்களை காப்பாற்றி கொண்டோம். ஜெ.அன்பழகனை காப்பாற்றமால் அவர்கள் விட்டுவிட்டனர்’ என்று தெரிவித்தார்.
  Published by:Karthick S
  First published: