சிறுவனை ஷூ கழட்ட சொன்ன விவகாரம் - வருத்தம் தெரிவித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

சிறுவனை ஷூ கழட்ட சொன்ன விவகாரம் - வருத்தம் தெரிவித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
  • Share this:
நீலகிரி மாவட்டம் முதுமலையில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,  சிறுவனை அழைத்து தனது ஷூவை கழற்றச் சொன்னது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானை முகாமில், கோவில் வளர்ப்பு யானைகளுக்கு இன்று முதல் புத்துணர்வு முகாம் தொடங்கப்படுள்ளது. வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்த முகாமை தொடங்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முன்னதாக, நிகழ்ச்சிக்கு அமைச்சர் வருகை தந்தபோது, தனது ஷூவின் பெல்ட்டை கழற்ற அங்கிருந்த பழங்குடியின சிறுவனை அழைத்தார்.


அந்த சிறுவனும், கழற்றிவிட, இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, நியூஸ்18க்கு பேட்டியளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,

”யானை முகாமுக்கு நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, கோயிலுக்கு சென்றுவிட்டு போகலாம் என்று நினைத்து காலணியை கழற்றிவிட எண்ணினேன். நான் ஷூ மாட்டியிருந்ததால் அதனை கழட்ட முடியவில்லை. சுற்றியிருந்தவர்கள் பெரியவர்களாக இருந்ததால் அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை அழைத்து கழட்ட சொன்னேன். அந்த சிறுவன் என் பேரனைப்போல் இருந்ததால்தான் அவ்வாறு கழற்ற சொன்னேன். மற்றபடி எந்த உள்நோக்கமும் இல்லை. இது யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

வீடியோ: Also Read: காதலர் தினம் வாழ்த்து அட்டைகள்:
First published: February 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்