சிலைக் கடத்தல் வழக்கு: அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் வைக்கும் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்

சிலைக் கடத்தல் தொடர்பான 43 வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகியுள்ளதாக புகார் மனுவில் பொன் மாணிக்கவேல் குறிப்பிட்டுள்ளார்.

சிலைக் கடத்தல் வழக்கு: அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் வைக்கும் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்
பொன் மாணிக்கவேல்
  • News18
  • Last Updated: June 11, 2019, 12:29 PM IST
  • Share this:

சிலைக் கடத்தல் வழக்கு விசாரணையில் டிஜிபி-யும், அமைச்சர் ஒருவரும் தலையிடுவதாக சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் திடுக்கிடும் புகார் அளித்துள்ளார்.


தமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு தேவையான காவலர்கள், உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


இந்நிலையில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு செய்து கொடுக்கவில்லை எனக்கூறி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங் ஆகியோருக்கு எதிராக பொன் மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், உயர் நீதிமன்ற அனுமதி இல்லாமல் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ள நிலையில், எஸ்.பி. பதவி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு கீழ் பணியாற்றுபவர்களை எஸ்.பி. -யாக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ்வரியிடமும், கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங்கிடமும் வழக்கு குறித்த விவரங்களை தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், அமைச்சர் ஒருவரும் டிஜிபி-யும் தன்னுடைய விசாரணையில் தலையிடுகிறார்கள் என்றும், குறிப்பிட்ட 4 வழக்குகளை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள கூடுதல் டிஜிபி ஆர்வம் காட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்குகளில் அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


சிலைக் கடத்தல் தொடர்பான 43 வழக்குகளின் ஆவணங்கள் மாயமாகியுள்ளதாகவும் மனுவில் பொன் மாணிக்கவேல் குறிப்பிட்டுள்ளார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கான முழுமையான வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

சிறப்புப் பிரிவுக்கு தேவைப்படும் 8 ஆய்வாளர்கள், 47 உதவி ஆய்வாளர்கள் மற்றும் அவர்களுக்கான வாகன வசதி, உட்கட்டமைப்பு வசதி என எதுவும் செய்து கொடுக்காமல், தமிழக அரசு தொடர்ந்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயல்படுவதாக பொன் மாணிக்கவேல் குறிப்பிட்டுள்ளார். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.


Also see... கிரேஸி மோகனின் உடலுக்கு திரை உலகத்தினர் அஞ்சலி!

Also see...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see....
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்