தனியார் சட்டக்கல்லூரி துவங்குவதற்கு அனுமதி தர அரசு தயார் - அமைச்சர் சி.வி.சண்முகம்

சட்டக்கல்லூரிகள் இல்லாத மாவட்டத்தில் தனியார் சட்டக்கல்லூரிகள் துவங்க யாராவது முன்வந்தால் அனுமதி தர அரசு தயாராக உள்ளது என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

தனியார் சட்டக்கல்லூரி துவங்குவதற்கு அனுமதி தர அரசு தயார் - அமைச்சர் சி.வி.சண்முகம்
சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம்
  • News18
  • Last Updated: September 16, 2020, 12:22 PM IST
  • Share this:
சட்டக்கல்லூரிகள் இல்லாத மாவட்டத்தில் தனியார் சட்டக்கல்லூரிகள் துவங்க யாராவது முன்வந்தால் அனுமதி தர அரசு தயாராக உள்ளது என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய மனித நேய ஜனநாயக கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்  தமிமுன் அன்சாரி, வரலாற்று சிறப்பு மிக்க நாகப்பட்டினத்தில் சட்டக்கல்லூரி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் டெல்டா பகுதியிலே சட்டக்கல்லூரி இல்லை. எனவே சட்டக்கல்லூரியை அரசு அமைத்தால் மக்கள் பயன்பெறுவார்கள் என்றும் வலியுறுத்தினார்.


Also read... யு.பி.எஸ்.சி தேர்வுகள் தாமதம் ஆவதால் என்ன விளைவுகள் உருவாகும்? கல்வியாளர்கள் விளக்கம்..

இதற்கு பதில் அளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், அரசு பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கும் என்றார். மேலும், சட்டக்கல்லூரிகள் இல்லாத மாவட்டத்தில் தனியார் சட்டக்கல்லூரிகள் துவங்க யாராவது முன்வந்தால் அனுமதி தர அரசு தயாராக உள்ளது என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading