Home /News /tamil-nadu /

ரேசன் கடைகளில் பொருட்களை யார் எப்படி வாங்கலாம் - உணவுத்துறை அமைச்சர் விளக்கம்

ரேசன் கடைகளில் பொருட்களை யார் எப்படி வாங்கலாம் - உணவுத்துறை அமைச்சர் விளக்கம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஒரேநாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் மத்திய அரசின் திட்டம்

    ரேசன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க இயலாத வயதானவர்கள் கடிதத்தின் வாயிலாக மாற்று நபர்கள் மூலம் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சட்டப் பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.

    பட்ஜெட் மீதான விவாத்தில் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரேசன் அட்டைகளை பிரித்து பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், வயதானவர்கள் கை ரேகை வைத்து பொருட்கள் வாங்குவதில் சிரமம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

    அதற்கு பதில் அளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ஒரேநாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் மத்திய அரசின் திட்டம் என்றும், வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் கீழ் உள்ளவர்கள் என பிரித்து பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், கடந்த ஆட்சிக்காலத்திலிருந்து பயோ மெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், 99 சதவீத ரேசன் அட்டைதாரர்கள் அந்த முறையில் பொருட்களை பெற்று வருவதாகவும் கூறினார்.

    Must Read : தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து திட்டங்களும் நிச்சயம் நிறைவேற்றப்படும் - மு.க.ஸ்டாலின்



    ரேசன் அட்டைகளில் பெயர் உள்ளவரில் 50 வயதிற்கு மேலானார்களும், ரேசன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க இயலாத வயதானவர்கள் கடிதத்தின் வாயிலாக மாற்று நபர்கள் மூலம் பொருட்களை வாங்கலாம் என்றும். இதற்கென ரேசன் கடை அதிகாரிகளிடம் அனுமதி கடிதம் பெறவேண்டும் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Suresh V
    First published:

    Tags: News On Instagram, Ration Shop, TN Assembly

    அடுத்த செய்தி